டெல்லியில் உள்ள ஒரு ஏ.டி.எம்.-ல் பணம் நிரப்ப சென்ற வேனில் இருந்து ரூ. 1.5 கோடி கொள்ளையடிக்கப்பட்டது. அதனை தடுக்க முயன்ற பாதுகாவலர் கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.கொள்ளை நடந்த இடத்தில் விசாரணை நடத்தும் போலீஸார். படம்: மீதா அலாவத்
கமலா நகரில் அமைந்துள்ள டெல்லி பல்கலைக்கழகத்தின் வடக்கு வளாகம், பங்களா சாலையில் வங்கி ஏடிஎம் உள்ளது. இந்த ஏ.டி.எம்.-ல் பணம் நிரப்புவதற்காக நேற்று காலை 11 மணி அளவில் வேன் வந்தது.
வேனில் இருந்து பணத்தை எடுத்த ஊழியர்கள் அதனை ஏடிஎம்-ல் நிரப்பிக் கொண்டி ருந்தனர். அப்போது திடீரென இரண்டு கொள்ளையர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்களை தடுக்க முயன்ற ஏ.டி.எம். பாதுகாவலரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தனர்.
ஏடிஎம்மில் நிரப்ப வைத்திருந்த ரூபாய் நோட்டுகள் மற்றும் வேனில் இருந்த ரூ.1.5 கோடியுடன் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.
இந்தச் சம்பவம் குறித்து ரூப்நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து வடக்கு டெல்லி துணை ஆணையர் மதூர் வர்மா கூறியபோது, ‘கொள்ளை நடந்த போது எதிரில் இருந்த ஓட்டலில் மாணவர்கள் சாப்பிட்டுக் கொண்டி ருந்தனர். அவர்களிடமும், சிசிடிவி கேமரா உதவியாலும் விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில் கொள்ளையர்கள் பிடிபடுவார்கள்’ என்றார்.
மக்கள் நடமாட்டம் அதிகம் நிறைந்த கமலா நகரில் கையில் சூட்கேஸ், பெரிய பையுடன் பைக்கில் கொள்ளை யர்கள் தப்பிச் சென்றதை அங்கி ருந்த ஒருவர் செல்போன் கேமரா வில் படம் பிடித்திருக்கிறார்.
ஹெல்மெட் அணிந்திருந்த கொள்ளையர்கள் பைக்கை திருப்பும்போது ஒரு காருக்கு வழிவிட்டு பொறுமையுடன் தப்பிச் சென்றது செல்போன் கேமராவில் பதிவாகி உள்ளது. அதன் அடிப்படையில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top