கடல் சீற்றத்தால் படகில் தத்தளித்துக் கொண்டிருந்த 3 மீனவர்களை மீட்ட இலங்கை கடற்படை யாழ்பாணம் காவல்துறையினரிடம் ஒப்படைத்தது.
நாகப்பட்டிணம் மாவட்டம் வேதாரண்யம் பகுதியை சார்ந்த மீனவர்கள் காளியப்பன், காளிதாஸ், ஜோதிமதி ஆகிய மூன்று பேரும் பாக்யராஜ் என்பவருக்குச் சொந்தமான படகில் கடந்த 26ம் தேதி புதன்கிழமை கடலுக்குள் சென்றனர்.
வியாழக்கிழமை மீனவர்கள் 3 பேரும் கரை திரும்பாததால் மீனவர்களின் குடும்பத்தினர் மாவட்ட நிர்வாகத்திற்கும், கடலோர காவல்படையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து மீனவர்களும் கடலோர காவல்படையினர் மாயமான மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் கடல் சீற்றம் காரணமாக திசைமாறி சென்ற மீனவர்கள் இலங்கையில் யாழ்ப்பாணம் சுருளிபுரம் கடற்கரையில் வெள்ளிக்கிழமை மாலை கரை சேர்ந்தனர்.
இது தொடர்பாக யாழ்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரி மூர்த்தி கூறியதாவது,
வேதாரண்யத்தை சார்ந்த மூன்று மீனவர்களும் கடல் சீற்றத்தால் யாழ்பாணம் பகுதியில் படகில் தத்தளித்துக் கொண்டிருந்தனர். மீனவர்களை மீட்ட இலங்கை கடற்படை யாழ்பாணம் காவல்துறையினரிடம் ஒப்படைத்தது.
விசாரணைக்கு பின்னர் மீனவர்களை தூதரக அதிகாரிகள் பொறுப்பேற்றுக் கொண்டு மூவரும் உடல் நலம் சரியில்லாமல் போனதால் மருத்துவமைனையில் தற்போது சிகிக்கை அளித்து வருகிறோம்.
மேலும் இது குறித்து கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கடற்கொந்தளிப்புடன் காணப்படுவதால் மூன்று மீனவர்களையும் இந்திய கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு திங்கள்கிழமையன்று தாயகம் திரும்புவார்கள், என்றார்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top