பறவை காய்ச்சல் பீதியால், கோழி இறைச்சி விலை குறைந்த போதிலும், விற்பனை மந்தமாகவே உள்ளது. எனினும் மீன் விலையும் மலிவாகவே உள்ளது.

கேரளாவில் ஏற்பட்டுள்ள பறவை காய்ச்சல் பீதியினால் சென்னையில் உள்ள பொதுமக்கள் கோழி இறைச்சி வாங்க அச்சப்படுகின்றனர். இதனால், சென்னை கறிக்கோழி கடைகளில் விற்பனை மந்தமாக காணப்படுகிறது
பறவை காய்ச்சல் பீதி: கோழி இறைச்சி விலை குறைவு-விற்பனை மந்தம்
இது குறித்து தமிழ்நாடு அனைத்து இறைச்சி கூட்டமைப்பின் தலைவர் சபீர் அகமது கூறியதாவது:-

ஊடகங்கள் மற்றும் நாளேடுகளில், கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி இருப்பதாக செய்திகள் வெளியாகி வருவதால், தமிழகத்தில் உள்ள மக்கள் கோழி இறைச்சி வாங்க பயப்படுகின்றனர். இதனால், கோழி இறைச்சி விற்பனை மிகவும் மந்தமாக உள்ளது.

கிலோ 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கோழிக்கறியை 120 முதல் 130 ரூபாயாக குறைத்தும், உயிருடன் 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கோழியை 100 ரூபாயாக குறைத்தும் விற்பனை செய்தபோதும் மக்கள் வாங்க முன்வரவில்லை. இதனால் நேற்று(நேற்று முன்தினம்) ஞாயிற்றுக்கிழமை வழக்கமாக விற்பனையில் 50 விழுக்காடு விற்பனையே நடைபெற்றுள்ளது.

கோழிக்கறி வாங்காத மக்கள் மட்டன் வாங்க முற்படுகின்றனர். ஆனால், வெளிமாநிலங்களில் இறக்குமதி செய்யப்படும் மட்டன் விலை அதிகரித்துள்ளதால் மட்டன் இறக்குமதியும் குறைந்துள்ளது. பெரும்பாலான கறிக்கடை உரிமையாளர்கள் கடைகளை அடைக்கும் சூழ்நிலையிலேயே இருக்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

பொதுவாக கார்த்திகை மாதம் பலர் சபரி மலைக்கு செல்வதால் அசைவ உணவை சாப்பிடுவதில்லை. இதனால் மீன் விலை வழக்கத்தை விட மலிவாகவே காணப்படும். அதே போன்று தற்போதும் மீன் விலை மலிவாகவே உள்ளது.

பறவை காய்ச்சல் பீதியில் கோழிக்கறி வாங்காத மக்கள் மீன் கடைகளுக்கு படையெடுத்ததால், ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டும் மீன் விற்பனை சற்று அதிகமாக இருந்தது. நேற்று மீன் விலை மலிவாக இருந்த போதிலும், வழக்கம்போல் மீன் விற்பனை மந்தமாகவே இருந்தது என்று மீன் வியாபாரிகள் தெரிவித்தனர்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top