கவுகாத்தி ஐ.ஐ.டி. மாணவன் விடுதியின் 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை
அசாம் மாநிலம் கவுகாத்தியில் ஐ.ஐ.டி. இன்ஸ்டிடியூட் செயல்பட்டு வருகிறது. இங்கு இந்தியாவின் பல பகுதியில் உள்ள மாணவர்கள் விடுதியில் தங்கி படித்து வருகிறார்.

அரியானா மாநிலம் குர்கானைச் சேர்ந்தவர் துஷ்கார் யாதவ். இவர் கவுகாத்தில் விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் படித்து வந்தார். இவர் இன்று அதிகாலை விடுதியின் 4-வது மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்தவற்கு முன் தன் பெற்றோருக்கு ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களாக ஒருவித மன அழுத்தத்துடன் காணப்பட்டதாகவும், இன்று தற்கொலை செய்து கொண்டதாகவும் விசாரணையில் தெரிய வந்தது என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரவித்தார்.

மேலும், தற்கொலை செய்து கொண்ட மாணவன் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு, அவரது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top