தெற்காசியாவில் குழந்தை திருமணங்கள் அதிகம் நடைபெறும் நாடுகள் வரிசையில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இதுதொடர்பாக ஐ.நா.வின் யூனிசெப் அமைப்பு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தெற்காசியாவில் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் திருமணங்கள் அதிகரித்து வருகின்றன. இந்தப் பிராந்தி யத்தில் சுமார் 46 சதவீத பெண்களுக்கு அவர்கள் 18 வயதை எட்டும் முன்னரே திருமணம் நடைபெறுகிறது. இதில் 18 சத வீதம் பேர் 15 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள்.
குழந்தை திருமணம் அதிகம் நடைபெறும் நாடுகள் வரிசையில் வங்கதேசம் முதலிடத்தில் உள்ளது. இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. நேபாளம், ஆப்கானிஸ்தான் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. குழந்தை திருமணத்தை தடுக்க பெண் குழந்தைகள் கல்விக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். இதற்கு அவர்களின் குடும்பங்கள் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற வேண்டும்.
தெற்காசிய நாடுகளில் குழந்தைகளின் பிறப்பை பதிவு செய்வதை கண்டிப்புடன் அமல் படுத்த வேண்டும். அப்போதுதான் பெண் குழந்தைகளின் சரியான வயதைக் கண்டறிந்து குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்த முடியும். ஆனால் இந்தப் பிராந்தி யத்தில் 60 சதவீத குழந்தைகளின் பிறப்பு பதிவு செய்யப்படுவதில்லை. இந்தியாவில் மட்டும் கடந்த 2000 முதல் 2012-ம் ஆண்டு வரை 7.1 கோடி குழந்தைகளின் பிறப்பு பதிவு செய்யப்படவில்லை.
கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெணா என்பதை கண்ட றிந்து பெண் குழந்தை என்றால் கருவிலேயே கொலை செய்யும் வழக்கம் தெற்காசியாவில் அதிகமாக உள்ளது. குறிப்பாக இந்தியாவில் இந்த சமூக கொடுமை இன்னமும் தொடர்கிறது.
வங்கதேசம், இந்தியா, பாகிஸ் தான், இலங்கை ஆகிய நாடுகளில் 5 வயது முதல் 13 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளில் 2.7 கோடி பேர் பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விடுகின்றனர். குழந்தைகளுக்கான கழிப்பறை வசதியும் போதுமானதாக இல்லை. இந்தியாவில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 48 சதவீதம் பேருக்கு போதிய கழிப்பறை வசதி இல்லை.
தெற்காசியாவில் ஊட்டச்சத்து குறைபாடும் அதிகமாக உள்ளது. சுமார் 38 சதவீத குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் விளைவாக 20 லட்சம் குழந்தைகள் ஐந்து வயதை எட்டும் முன்னரே உயிரிழக்கின்றனர்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top