கும்பகோணம், டிச.16–
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் என்.ராஜா கும்பகோணத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:–
கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே தடுப்பணை கட்டுவதையும், அதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்தியும் வருகிற 20–ந்தேதி (சனிக்கிழமை) கும்பகோணம் காந்தி பூங்கா அருகே காலை 10 மணி அளவில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.காவிரியில் அணை கட்டுவதை கண்டித்து கும்பகோணத்தில் 20–ந்தேதி சரத்குமார் ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் நிறுவனத் தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ தலைமை தாங்குகிறார். மாநில நிர்வாகிகள் எர்ணாவூர் நாராயணன் எம்.எல்.ஏ., கரு.நாகராஜன், ஏ.என். சுந்தரேசன், ஜெயபிரகாஷ், விவேகானந்தன், பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் இருந்து ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். தஞ்சை வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட 6 ஒன்றியங்களிலிருந்து சுமார் 6 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள். மற்ற இடங்களிலிருந்து 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொள்கின்றனர்.
மொத்தத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் மிகப்பெரிய ஆர்ப்பாட்டமாக இது அமையும். ஆர்ப்பாட்டத்தில் காவிரி டெல்டா மாவட்டத்தில் உள்ள சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள், தொண்டர்கள், விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் திரளாக பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மாநில பொதுக்குழு உறுப்பினர் முகமது இஸ்மாயில், மாவட்ட அவைத்தலைவர் மகாராஜன், நகர செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர்கள் ரஹ்மான், ரமேஷ்கிருஷ்ணா, மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், பாபநாசம் தொகுதி செயலாளர் கிருபாகரன், திருவிடைமருதூர் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top