ஜம்முவில் தீவிரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். மூன்று பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் அர்னியா பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதி வழியாக தீவிரவாதிகள் சிலர் ஊடுருவ முயன்றனர்.
அவர்களை தடுக்க இந்திய தரப்பில் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் பலியானார் மூன்று பேர் காயமடைந்தனர்" என்றார்.
தீவிரவாதிகள் ஊடுருவல் தொடர்பான முதல்கட்ட தகவலின்படி, அர்னியா பகுதியில் நுழைந்த தீவிரவாதிகள் திடீரென்று சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இதனையடுத்து, உடனடியாக ராணுவம், எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள், போலீஸார் பதில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், ராணுவத்தின் 92-வது படைப்பிரிவுக்குச் சொந்தமான பதுங்கு குழியில் தீவிரவாதிகள் பதுங்கி கொண்டு தீவிர தாக்குதலில் ஈடுபட்டனர். துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரர் பலியாகினார்.
எல்லையில் ராணுவ வீரர்கள்| கோப்புப் படம்.
பொதுமக்களில் ஒருவர் உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர். தீவிரவாதிகள் பயன்படுத்திய வாகனம் ஒன்று சம்பவ இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்டது.
இதேபோல், ரஜோரி மாவட்டத்திலும் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதி வழியாக தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சித்தனர். ஆனால் ராணுவத்தினர் தாக்குதலை சமாளிக்க முடியாமல் அவர்கள் பின்வாங்கினர். தொடர்ந்து நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் தீவிரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மோடி பிரச்சாரம்:
காஷ்மீர் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் 5 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் முடிவுற்ற நிலையில் வரு, 2-ம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி பூஞ்ச் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பிரதமர் நரேந்திர மோடி நாளை பிரச்சாரம் செய்கிறார்.
பாதுகாப்பு அதிகரிப்பு:
மோடி பிரச்சாரத்தை ஒட்டி தீவிரவாதிகள் ஊடுருவல் முயற்சி நடந்துள்ளது. ராணுவ வீரர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார். இந்தச் சம்பவங்களால் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் கூடுதல் படைகள் குவிக்கப்பட்டுள்ளன.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top