முல்லைத்தீவு பகுதியில் தமிழர்கள் முன்னிலையில் உரையாற்றிய ராஜபக்ச, 'கடந்த காலத்தை மறந்து விடுங்கள்' என்று பேசியுள்ளார்.
இலங்கை அதிபர் ராஜபக்ச. | படம்: ஏ.பி.
முல்லைத்தீவு பகுதியில் தமிழர்களிடத்தில் அவர் கூட்டம் ஒன்றில் பேசும் போது, “ஈரான், லிபியா, எகிப்து போன்ற நாடுகளில் என்ன நடந்தது என்பதைப் பாருங்கள். அது போன்ற ஒரு சூழ்நிலையை இந்த நாட்டில் நாம் அனுமதிக்க முடியாது. நாம் ஒற்றுமையாக செயல்பட வேண்டும், கடந்த காலத்தை மறந்து விடுங்கள், நாம் ஒருங்கிணைந்து இந்த நாட்டை கட்டமைப்போம். 

வரலாற்றை மீண்டும் நிகழ நாம் அனுமதிக்கக் முடியாது.” என்ற ராஜபக்ச எல்.டி.டி.இ பற்றி பேச்சு எடுக்கவில்லை. முல்லைத்தீவில்தான் கடைசி கட்ட போர் நடந்தது. அங்கு இன்னமும் தமிழர் குடும்பத்தினர் காணாமல் போன தங்கள் குடும்ப உறுப்பினர்களைத் தேடிக் கொண்டிருக்கின்றனர்.

பிறகு ராஜபக்ச கூறும்போது, “நான் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ராணுவப் பள்ளியில் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பலியான குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் குறித்து இரங்கல் தெரிவித்தேன்” என்றார்.

மேலும் பேசும்போது, தமிழர்கள் பகுதியில் பொருளாதார நடவடிக்கைகளை துரிதப்படுத்தி தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்துவதாக வாக்குறுதி அளித்தார். 

இலங்கையின் 15.5 மில்லியன் மக்கள் தொகையில் தமிழர்கள் மக்கள் தொகை 15%. அடுத்த தேர்தலில் அதிபர் யார் என்பதை இந்த விகிதம் நிச்சயம் தீர்மானிக்கும் என்ற நிலையில் ‘கடந்த காலத்தை மறந்து விடுங்கள்’ என்று அவர் பேசியுள்ளார்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top