மானிய விலையில் 5 கிலோ சமையல் ஏரிவாயு சிலிண்டர் தற்போது கிடைக்கிறது. டெல்லியில் இதன் விலை சிலிண்டருக்கு ரூ.155 என்பது குறிப்பிடத்தக்கது.

வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு 14.2 கிலோ சிலிண்டராக மட்டுமே இதுவரை கிடைத்து வந்தது. மானிய விலை சிலிண்டரான இது ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் வரை கிடைத்து வருகிறது.

எண்ணெய்வளத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று மாநிலங்களவையில் இதனை அறிவித்து கூறும்போது, “மானிய விலையில் வாடிக்கையாளர்கள் 5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஆண்டுக்கு 34 சிலிண்டர்கள் வரை இனி பெறலாம். இதற்கும் அதிகமாக சிலிண்டர்கள் தேவைப்பட்டால், சந்தை விலையான ரூ.351-க்கு பெறலாம்.” என்றார்.

14.2 மானிய விலை எரிவாயு சிலிண்டர்கள் போலவே இந்த 5 கிலோ எடை சிலிண்டர்களும் வழக்கமான வினியோகஸ்தர்களிடத்தில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சில தேர்ந்தெடுக்கப்பட்ட பெட்ரோல் நிலையங்களிலும் இந்த 5 கிலோ சிலிண்டர் கிடைக்கும் ஆனால் விலை ரூ.351 என்பது குறிப்பிடத்தக்கது. 

குறைந்த வருவாய் உள்ளவர்களுக்கு இந்தத் திட்டம் பெரிதும் உதவும் என்று மத்திய அமைச்சர் தெரிவித்தார்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top