அடிலெய்டு டெஸ்டில் சதம் அடித்த வார்னர், மிகவும் உணர்வுபூர்டேவிட் வார்னர் | படம்: ஏ.எஃப். பிவமாக தன்னுடைய சதம் பற்றி கூறியதாவது:
நான் சந்தித்த முதல் பந்திலிருந்து, மறுமுனையில் ஹியூஸ் என்னுடன் இருந்ததை உணர்ந்தேன். தனக்கு வந்த அஞ்சலிக் குறிப்புகளை எண்ணி அவர் என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தார். 63-வது ரன்னைத் தொட்டபோது மிகவும் கஷ்டமாக இருந்தது. அப்போது சுழற்பந்து வீச்சாளர் பந்து வீசிக்கொண்டிருந்தபோதும் ஹியூஸ் பவுன்சரால் தாக்கப்பட்ட சம்பவம் நினைவுக்கு வந்தது. அந்த ஸ்கோரை தாண்ட நினைத்தேன்.
அந்த நேரத்தில் மைக்கேல் கிளார்க் என்னிடம் வந்து நான் சரியாக இருக்கிறேனா என்றுகூட கேட்டார். 63 என்கிற எண் எங்கள் தலைமுறையில், எங்கள் கிரிக்கெட் வாழ்க்கையில் கூடவே இருக்கப் போகிறது. பலர் 63 ரன்களை எடுத்தவுடன் தங்களுடைய பேட்டை உயர்த்தி காண்பிக்கப் போகிறார்கள். (வார்னரும் அவ்வாறு செய்தார்.) வானத்தைப் பார்த்து ஹியூஸ் எங்களை கவனிப்பதை உணர்வோம்.
டெஸ்டுக்கு முன்பு நடைபெற்ற பயிற்சியின்போது என்னால் கவனம் செலுத்தவேமுடியவில்லை. எல்லாவற்றையும் மீறி வந்து இங்கு ஆடிய என் சக வீரர்கள் மீது பெருமிதம் கொள்கிறேன். சதம் அடித்தபிறகு அதைக் கொண்டாடுவதா வேண்டாமா என்றுகூட நினைத்தேன். ஆனால் ஹியூஸ் நான் கொண்டாடுவதையே விரும்புவார் என்பதால் அதன்படி செய்தேன். இந்த சதத்தை அவருக்கு காணிக்கையாக்குகிறேன்.
தனிப்பட்ட முறையில் நான் மிகவும் கடினமாக நினைப்பது, ஹியூஸ் பவுன்சரால் தாக்கப்பட்ட சிட்னியில் எப்படி கடைசி டெஸ்ட் போட்டியை ஆடப்போகிறேன் என்பதுதான். முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் சில விக்கெட்டுகளை இழந்துவிட்டோம். நான் இன்னும் சிறிது நேரம் ஆடியிருக்கவேண்டும். பொறுமையின்றி ஆடி அவுட் ஆகிவிட்டேன் என்றார்.
காலையில்தான் தெரியும் - கரண் சர்மா
அடிலெய்டு டெஸ்டில் அறிமுகமான இந்திய சுழற்பந்து வீச்சாளர் கரண் சர்மா கூறியதாவது:
காலையில்தான் (நேற்று) நான் அடிலெய்டு டெஸ்டில் ஆடப்போகிறேன் என்று எனக்குத் தெரியும். நான் வழக்கமாக எப்படி பந்துவீசுவேனோ அப்படி பந்துவீச சொன்னார் கோலி. ரவி சாஸ்திரியும் ஊக்கமளித்தார்.
எங்கும் எதிலும் ஹியூஸ்
பிலிப் ஹியூஸ் மரணத்துக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் நடக்கும் முதல் டெஸ்ட் போட்டி என்பதால் அடிலெய்டு மைதானத்தில் ஹியூஸின் பாதிப்பை நாள் முழுக்க காண முடிந்தது.
408 என்று பொறிக்கப்பட்டிருந்த சட்டையை அனைத்து ஆஸ்தி ரேலிய வீரர்களும் அணிந்திருந் தார்கள். இரு அணி வீரர்களும் தங்கள் இடது கையில் கருப்பு நிறப் பட்டையை (ஆர்ம்பேண்ட்) அணிந்திருந்தார்கள். ஆஸ்திரேலிய அணியின் ஓய்வறையில் ஹியூஸ் புகைப்படம் வைக்கப்பட்டிருந்தது. மைதானத்தில் ஹியூஸின் புகைப்படத்துக்கு ஏராளமான மலர் வளையங்கள், பூங்கொத்துகள் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
மைதானத்தில் பெரிய எழுத்துகளில் எழுதப்பட்ட 408 என்ற எண்ணின் முன்பு இரு அணி வீரர்களும் நின்று மரியாதை செலுத்தினார்கள். நேற்றும் ஹூயூஸை நினைத்து கிளார்க் கண்ணீர் சிந்தினார். வழக்கமாக அரைக்கை சட்டை அணியும் கிளார்க், நேற்று ஹியூஸ் போல முழுக்கை சட்டை அணிந்து வந்திருந்தார். மற்ற வீரர்களும் மிகவும் சோகமாக காணப்பட்டார்கள். ஹியூஸின் நினைவாக, மைதானத்திலிருந்த ரசிகர்களும் கிரிக்கெட் வீரர்களும் 63 விநாடிகள் கரவொலி எழுப்பினார்கள்.
அஞ்சலி நிகழ்ச்சியின்போது மைதானத்தில் இருந்த திரையில் ஹியூஸின் புகைப்படம் காண்பிக்கப்பட்டது. ஆஸி. வீரர் ஷேன் வாட்சன், ஹியூஸ் பயன்படுத்திய லாக்கரை அவர் எடுத்துக்கொண்டார். ஆஸி. அணியின் வீரர்கள் பட்டியலில் 13-வது வீரராக ஹியூஸின் பெயர் இடம்பெற்றிருந்தது. வார்னர், ஸ்மித் ஆகிய இருவரும் நேற்று 63 ரன்கள் எடுத்தபோது வானத்தைப் பார்த்து வணங்கினார்கள். பிறகு, பேட்டை உயர்த்தி ரசிகர்களுக்குக் காண்பித்தார்கள். ரசிகர்களும் ஹியூஸுக்குப் புகழஞ்சலி செலுத்தும் விதமாக அதற்கு ஆரவாரம் செய்தார்கள்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top