சென்னை,டிச.16–
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
பாரதிய ஜனதா கட்சி அரசு பொறுப்பேற்ற பின்னர் கடந்த ஜூன் மாதம் ரெயில்வே பயணிகள் கட்டணம் 14.5 விழுக்காடு உயர்த்தப்பட்டு, சரக்கு ரெயில் கட்டணத்தை உயர்த்தக்கூடாது: வைகோ அறிக்கைபோக்குவரத்துக்கட்டணமும் 6.5 விழுக்காடு உயர்ந்தது. தற்போது மீண்டும் ரெயில்வே பயணிகள் கட்டணமும் சரக்குக்கட்டணமும் உயர்த்தப்பட்டு, பிப்ரவரி 2015 இரயில்வே நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்படும் என்று மத்திய ரெயில்வே அமைச்சகத்தின் தகவல்கள் வந்துள்ளன.
எரிபொருள் விலைக்கு ஏற்ப ரெயில்வே கட்டணங்களை அவ்வப்போது மாற்றி அமைக்கப்படும் என்று ரெயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார். மொத்தக்கட்டண உயர்வில் எரிபொருள் விலையை அடிப்படையாகக்கொண்டு பயணிகள் கட்டணம் 4.2 விழுக்காடு அளவுக்கும், சரக்குக்கட்டணம் 1.4 விழுக்காடு அளவுக்கும் ஜூன் 2014 இல் உயர்த்தப்பட்டது.
2015 ரெயில்வே நிதிநிலை அறிக்கையில் இந்தக்கட்டண உயர்வு விகிதம் அதிகரிக்கப்படும் என்று தெரிகிறது.
ரெயில்வே துறையின் மேம்பாட்டுக்கு 6 லட்சம் கோடி ரூபாய் முதல் 8 லட்சம் கோடி ரூபாய் வரை நிதி தேவைப்படுகிறது. எனவே ரெயில்வே துறையில் பெரிய அளவில் நிதி மூலதனம் திரட்டப்பட வேண்டும் என்பதையும் ரெயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு சுட்டிக்காட்டி இருக்கின்றார். காங்கிரஸ் கூட்டணி அரசை விட மிக வேகமாக மோடி அரசு, பொதுத்துறை நிறுவனங்களை சீர்குலைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறையாக சிறந்து விளங்கும் இரயில்வே துறையை தனியார் மயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக இறங்கி உள்ளது. இரயில்வே துறையின் சார்பில் டிசம்பர் 5ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பு இதனை உறுதி செய்கிறது.
மத்திய அரசின் கொள்கைகளைத்தீர்மானிக்க அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள உயர்நிலைக்குழுவில் தனியார் நிறுவன பிரதிநிதிகளும் இடம் பெற்றிருப்பது மோடி அரசின் தனியார் மயமாக்கும் திட்டத்தைப்பறை சாற்றுகிறது.
மத்திய ரெயில்வே துறை இணை அமைச்சர் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் ரெயில்வே துறையில் நூறு விழுக்காடு அந்நிய நேரடி முதலீட்டுக்கான திட்டங்களை தெரிவித்து உள்ளார். ரெயில்வே கட்டமைப்புத்துறைகளில் நூறு விழுக்காடு அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று ரெயில்வே இணை அமைச்சர் அறிவித்துள்ளார்.
பெரும் நிறுவனங்களுக்கு லட்சக்கணக்கான கோடி ரூபாய்க்கு சலுகைகளை வாரி வழங்கும் மத்திய அரசு, இரயில்வே துறையை தனியார்மயம் ஆக்க முயற்சிப்பதற்கும், இரயில்வே பயணிகள் கட்டணம் மற்றும் சரக்குக்கட்டணம் உயர்த்த திட்டமிட்டுள்ளதற்கும் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். 2015ஆம் ஆண்டு இரயில்வே நிதி நிலை அறிக்கையில் உத்தேசிக்கப்பட்டுள்ள இரயில்வே கட்டண உயர்வைக்கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top