ராஞ்சி, நவ. 30–
ஜார்க்கண்ட், காஷ்மீர் மாநிலங்களுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.
கடந்த 25–ந்தேதி இந்த மாநிலங்களில் முதல் கட்ட வாக்குபதிவு நடந்தது. ஜார்க்கண்டில் மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் 13 இடத்துக்கும், காஷ்மீரில் மொத்தம் உள்ள 87 இடங்களுக்கு 15 தொகுதிக்கும் அன்று தேர்தல் நடைபெற்றது.
2–வது கட்ட தேர்தல் நாளை மறுநாள் (டிசம்பர் 2) நடக்கிறது. ஜார்க்கண்டில் 20 தொகுதிக்கும், காஷ்மீரில் 18 தொகுதிக்கும் வாக்கு பதிவு நடைபெறுகிறது.
இரு மாநிலங்களிலும் மொத்தம் உள்ள 38 தொகுதிகளுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.ஜார்க்கண்ட், காஷ்மீர் 2–ம் கட்ட தேர்தல்: 38 தொகுதிகளில் இன்று பிரசாரம் ஓய்கிறது
பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் காஷ்மீர், ஜார்க் கண்ட் மாநிலத்தில் தீவிர பிரசாரம் செய்தார்.
இதே போல காங்கிரஸ் தலைவர்களும் அங்கு முகாமிட்டு பிரசாரம் செய்து வருகின்றனர்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top