சென்னை, நவ. 30–
தி.மு.க. பொருளாளரும், முன்னாள் துணை முதல்–அமைச்சருமான மு.க.ஸ்டாலின் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
2016–ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தேசிய கட்சியான காங்கிரஸ் அல்லது பா. ஜனதாவுடன் கூட்டணி அமைப்போமா? என்று இப்போது சொல்ல முடியாது. அதற்கு தற்போது சரியான நேரம் இல்லை.2016 சட்ட மன்ற தேர்தல் எதிர்க்கட்சிகளை இணைத்து புதிய கூட்டணி: ஸ்டாலின் பேட்டி
தமிழ்நாட்டில் தற்போது எதிர்கட்சிகள் தனித்தனியாக பிரிந்து கிடப்பது உண்மைதான். 1967–ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா காங்கிரசை எதிர்க்க ஒரு முன்னிலையை (கூட்டணி) உருவாக்கினார். அது போன்று தற்போது நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலிலும் எதிர்க்கட்சிகளை ஒன்று இணைத்து பலம் வாய்ந்த கூட்டணி அமையும் சூழ்நிலை உருவாகும்.
சட்டமன்ற தேர்தலையொட்டி நான் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தி.மு.க. தொண்டர்களை சந்தித்து கட்சியை பலப்படுத்தி வருகிறேன்.
கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் மற்றும் விலகியவர்கள் வருத்தம் தெரிவித்து கட்சிக்கு மீண்டும் திரும்பினால் அவர்களை ஏற்றுக்கொள்ள தி.மு.க. எப்போதும் தயாராக இருக்கிறது.
பாரதீய ஜனதாவின் தலைமுறை மாற்றம் தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது என்பதே எனது கருத்து. தி.மு.க.வில் அனைத்து தரப்பினரும் ஒன்று இணைந்து செயல்படுகிறார்கள். கருணாநிதியே எப்போதும் தலைவராக இருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top