திருச்சி, நவ. 30–
திருச்சியில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா நேற்று நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் எம்.எல்.ஏ., தமிழ்நாடு நர்சரி, மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் சங்க பாதுகாப்புக்குழு தலைவர் கே.ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ. பேசியதாவது:–
ஒரு மனிதனின் அடித்தள பள்ளியில் தான் அமைகிறது. இன்றைய கால கட்டத்தில் தாய், தந்தை பணிக்கு செல்லும்போது, ஆசிரியர்களே பெற்றோர்களாக இருந்து குழந்தைகளை கவனிக்கிறார்கள். ஆசிரியர்களாகிய உங்களிடம் தான் அதிகமாக இந்த சமுதாயம் எதிர்பார்க்கிறது. கல்விக்கு ஏற்ற வேலையும், அதற்கேற்ற ஊதியமும் கிடைக்கும்போது தான் நீங்கள் சொந்தகாலில் நிற்க முடியும்.மாணவர் தற்கொலைகள்: தோல்வியை சந்திக்கும் மனபக்குவத்தை பள்ளியில் கற்றுக்கொடுக்க வேண்டும்-சரத்குமார்
இப்போது போட்டி அதிகமாகி விட்டது. எந்தவொரு மாணவனும் 100 சதவீதம் தேர்ச்சி அடையும் விதத்தில் ஆசிரியர்களாகிய நீங்கள் உருவாக்கி தருகிறீர்கள். என்னை பொறுத்தவரை மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் கல்வி இலவசமாக்கப்பட வேண்டும்.
படிக்கும்போதே இதை படித்தால், இத்தகைய நிலைக்கு வரலாம் என்ற தொலைநோக்கு திட்டம் வேண்டும். பெருந்தலைவர் காமராஜர் அத்தகைய தொலைநோக்கு திட்டத்தை கொண்டு இருந்ததால் தான், பள்ளி குழந்தைகளின் தேவையை உணர்ந்து மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். தமிழகம் முழுவதும் 19 ஆயிரம் பள்ளிகளை திறந்து வைத்தார். இப்போது எவ்வளவோ மாற்றம் வந்து விட்டது. சுகாதாரமான காற்று கிடையாது. ஆரோக்கியமான வாழ்வு வேண்டும். அதற்காக தான் பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவில் பேரீச்சம்பழத்தை சேர்க்க வேண்டும் என்று கூறி இருந்தேன்.
இப்போது மாணவர்கள் எதற்கெடுத்தாலும் தற்கொலை செய்து கொள்ள நினைக்கிறார்கள். தோல்வியை சந்திக்கிற மனப்பக்குவத்தை பள்ளியில் தான் கற்றுக்கொடுக்க வேண்டும். தோல்வி என்பது வாழ்வில் நடக்கிற ஒரு சம்பவம். தோல்வியை சந்திக்க பயப்பட்டால் வாழ்வில் முன்னேற முடியாது. பள்ளிக்கு வரும் மாணவனின் குடும்ப சூழ்நிலையையும் ஆசிரியர்கள் அறிந்து இருக்க வேண்டும். மாணவர்களின் மனநிலையை அறியும் மனோதத்துவ நிபுணர்களாக ஆசிரியர்கள் இருக்க வேண்டும். பள்ளி ஆசிரியர்களை அதிகரிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை என்னிடம் வைத்து உள்ளீர்கள். உங்கள் கோரிக்கைகளை பரிசீலித்து, அவை நிறைவேற உறுதுணையாக இருப்பேன்.
இவ்வாறு அவர் பேசினார்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top