சென்னை சேலையூரில் பாகனை மிதித்து கொன்ற யானைக்கு மதம் பிடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை சேலையூரில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் அகோபில மடம் உள்ளது. இங் குள்ள யானை மாலோலன் மிதித்த தில் பாகன் கணேஷ் (21) நேற்று முன் தினம் பலியானார்.
பாகன், யானையின் பின்னங் காலை சங்கிலியால் கட்ட முயன்ற போது தடுமாறி விழுந்தார் என் றும் அப்போது எதிர்பாராத விதமாக யானை தனது காலை பாகனின் வயிற்றில் வைத்து மிதித்ததால் பாகன் உயிரிழந்தார் என்றும் தகவல்கள் வெளியானது. ஆனால் இந்த சம்பவத்தில் உண்மை இல்லை என்றும் யானைக்கு மதம் பிடித்ததால் தான் பாகன் கொல்லப்பட்டார் என்று சிலர் கூறியுள்ளனர்.
இந்து சமய அறநிலையத்துறை யின் மூத்த அதிகாரி ஒருவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
இந்த யானை சென்றாண்டு நடந்த புத்துணர்ச்சி முகாமில் பங்கேற்றது. அப்போது குளிர்காலம் என்பதால் யானைக்கு லேசாக மதம் பிடித்தது. யானையின் பாகனாக இருந்தவர் கேரளத்தை சார்ந்தவர். அவர் குடிப்பழக்கம் கொண்டவர் என்பதால், அவரை முகாமில் இருந்து வெளியேற்றினோம். அந்த யானை கேரளாவை சேர்ந்தது ஆகவே, அதற்கு மலையாள மொழியில் தான் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வந்தன. ஆனால் புதிதாக வந்த பாகன் கணேஷ் தமிழகத்தை சார்ந்தவர் அவர், தமிழில் பேசியதால், யானைக்கும் அவருக்குமான புரிதல் சரியானபடி அமையவில்லை.
கொல்லப்பட்ட பாகன் கணேஷ், புதியவர். இந்நிலையில் குளிர் காலம் ஆரம்பித்ததும், யானைக்கு மீண்டும் மதம் பிடித்தது. இதனை அறியாத பாகன் வழக்கம் போல் யானையை அணுகியுள்ளார். இந்நிலையில் இதில் ஆத்திரம் கொண்ட யானை தன் காலை சங்கிலியால் கட்ட முயன்ற பாகனை விசிறியடித்து மிதித்தது. இது தொடர்பாக அறநிலையத் துறையின் ஆய்வாளரும் விசாரணையில் ஈடுபட்டு வருகிறார். இன்னும் ஓரிரு நாளில் முழு விவரமும் தெரிய வரும்” என்றனர்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top