நவம்பர் 30, 1988
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் உள்ள மேக்ஸ்வில்லியில் பிறந்தார். முழுப் பெயர் பிலிப் ஜோயல் ஹியூஸ்முதல் படம்: ஆஸ்திரேலியா கேப்டன் கிளார்க் கதறி அழுத காட்சி
இரண்டாவது படம்(வலது) : ஹியூஸின் பெற்றோர்கள்
மூன்றாவது படம் (கீழே) : ஹியூஸுக்கு பவுன்சர் வீசிய சீன் அபோட் அழுது கொண்டே மருத்துவமனையிலிருந்து வெளியேறுகிறார்
நவம்பர் 2007
18 வயதில் நியூ சவுத் வேல்ஸ் அணிக்காக முதல் தர கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். முதல் போட்டியில் டாஸ்மானியாவுக்கு எதிராக 51 ரன்கள் எடுத்தார்.
பிப்ரவரி 2008
புரா கோப்பை இறுதிப் போட்டியில் விக்டோரியா அணிக்கு எதிராக 116 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார். முதல்தர கிரிக்கெட்டில் ஹியூஸ் அடித்த முதல் சதம் இது. இதன்மூலம் செப்பீல்ட் ஷீல்ட்/புரா கோப்பை இறுதிப் போட்டியில் சதம் அடித்த இளம் வீரர் (19 வயது) என்ற பெருமையைப் பெற்றார்.
பிப்ரவரி-மார்ச் 2009
மேத்யூ ஹேடன் ஓய்வுக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரராக உருவெடுத்தார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான அறிமுக டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் டக்அவுட்டான ஹியூஸ், அடுத்த இன்னிங்ஸில் 75 ரன்கள் எடுத்தார்.
டர்பனில் ஆடிய இரண்டாவது டெஸ்டில், இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்தார். இதன்மூலம் ஒரு டெஸ்டில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்த இளம் வீரர் (20 வயது) என்ற சாதனையைப் படைத்தார்.
ஜூலை 2009
அமர்க்களமாக ஆரம்பித்த ஹியூஸின் டெஸ்ட் வாழ்க்கை ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பின்னடைவை சந்தித்தது. இங்கிலாந்தில் நடந்த முதல் இரண்டு ஆஷஸ் டெஸ்டுகளில் சரியாக ஆடாததால் அணியிலிருந்து நீக்கப்பட்டார். பிறகு 2010 ஆரம்பத்தில் மீண்டும் டெஸ்ட் அணிக்குத் தேர்வானார்.
டிசம்பர் 2010
ஆஷஸ் தொடரில், மூன்று டெஸ்டுகளில் ஆட வாய்ப்பு கிடைத்தது.
ஆகஸ்ட்-டிசம்பர் 2011
இலங்கை சுற்றுப் பயணத்தில் 3-வது டெஸ்டில் சதம் அடித்தார் ஹியூஸ். ஆனால் டிசம்பரில் நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான இரண்டு டெஸ்டுகளிலும் சரியாக ஆடாததால் பின்னர் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான தொடரில் சேர்க்கப்படவில்லை.
டிசம்பர் 2012
ஓர் ஆண்டுக்குப் பிறகு இங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பிடித்தார். 3 டெஸ்டுகளில் இரண்டில் 85 ரன்களுக்கு மேல் எடுத்து இந்திய சுற்றுப் பயணத்துக்குத் தயாரானார்.
ஜனவரி 2013
இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனார் ஹியூஸ். அதில் 112 ரன்கள் குவித்த ஹியூஸ் அறிமுகப் போட்டியில் சதம் அடித்த முதல் ஆஸ்திரேலியர் என்ற சாதனையைப் படைத்தார். (இதுவரை மொத்தம் 9 வீரர்கள்தான் அறிமுக ஒருநாள் போட்டியில் சதம் அடித்துள்ளனர்.)
பிப்ரவரி – மார்ச் 2013
இந்தியாவில் மிகவும் தடுமாறினார். மொஹாலி டெஸ்டில் மட்டும் அதிகபட்சமாக 69 ரன்கள் எடுத்தார்.
ஜூலை 2013
ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ட்ரென்ட்பிரிட்ஜ் டெஸ்டில் 81 ரன்கள் எடுத்தார். அடுத்த டெஸ்டில் சரியாக ஆடாததால் 3-வது முறையாக அணியிலிருந்து நீக்கப்பட்டார்.
ஜூலை 2014
லிஸ்ட் ஏ ஒருநாள் போட்டியில் இரட்டைச் சதம் அடித்த முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். கடைசிப் பந்தில் சிக்ஸர் அடித்து 200 ரன்களைக் கடந்தார்.
ஆகஸ்ட் 2014
முதல் தர போட்டியில் 25 வயதில் அதிக ரன்களை எடுத்த ஆஸ்திரேலியர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார் ஹுயூஸ். அவருக்கு வளமான எதிர்காலம் உண்டு. இன்னும் பத்து வருடங்கள் கழித்து ஆஸ்திரேலிய அணிக்காக 100 டெஸ்டுகள் விளையாடிய ஹியூஸ் பற்றி நாம் பேசத்தான் போகிறோம் என்று ஆஸ்திரேலிய அணி கேப்டன் மைக்கேல் கிளார்க் பேட்டி கொடுத்தார். இந்தியாவுக்கு எதிரான தொடரில் ஹியூஸ் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகியிருந்தன.
நவம்பர் 2014
ஆஸ்திரேலியாவில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டியின்போது பவுன்சர் பந்தை அடிக்க முயன்ற ஹியூஸூக்கு கழுத்தில் அடிபட்டு பலத்த காயம் ஏற்பட்டது. பலமணி நேரப் போராட்டங்களுக்குப் பிறகு மரணம் அடைந்தார்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top