கவுகாத்தி, நவ. 30-

அசாம் தலைநகர் கவுகாத்தியில் நடைபெற்று வரும் உள்நாட்டு பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, மக்கள் மத்தியில் போலீசார் மீது தவறான எண்ணம் தோன்ற சினிமா துறையே காரணம் என கூறியுள்ளார்.
போலீஸ் மீது தவறான எண்ணம்: சினிமா துறையே காரணம்-மோடி குற்றச்சாட்டு
சினிமா துறையினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, போலீசாரின் நல்ல நடவடிக்கைகளை திரைப்படமாக வெளிக்கொண்டு வரவேண்டுமென அரசு வலியுறுத்தவேண்டும் என்று கூறியுள்ள மோடி, சாதாரண மக்களுக்கு போலீசார் மீது தவறான அபிப்ராயம் ஏற்படும் வகையில், திரைப்படங்கள் அவர்களை மோசமாக சித்தரித்து காட்டி வருவதாக குற்றஞ்சாட்டினார். காவல்துறையினரின் பணியில் சிற்சில குறைபாடுகள் இருக்கக்கூடும். ஆனால் அதையே மிகைப்படுத்தி காட்டுவது தவறாகும் என மோடி கூறினார்.

இது போன்று செயல்படுவது மிகப்பெரிய தவறு. இனி இது போல செயல்படுவதை தவிர்த்து, நல்லவற்றவையும், ஆரோக்கியமான விஷயங்களையும் மக்களுக்கு கொண்டு போய் சேர்க்கவேண்டும் என்று மோடி மேலும் தெரிவித்தார். திரைத்துறையில் உள்ள மிகப்பெரிய நட்சத்திரங்கள் போலீஸ் வேடத்தில் ஆண்டுக்கு ஒரு படமாடவது நடிக்கவேண்டும் என்று மோடி அப்போது கேட்டுக்கொண்டார்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top