எபோலா நோய் தொற்றுள்ள நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகள் சம்பந்தப்பட்ட நாட்டின் சுகாதார அமைச்சகத்தில் இருந்து பெற்ற 'நோ - எபோலா' சான்றிதழை வைத்திருப்பது கட்டாயம் என வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
அண்மையில் எபோலா நோய்க்கு சிகிச்சை பெற்று குணமடைந்த லைபீரிய நாட்டைச் சேர்ந்த ஒருவர் இந்திய விமான நிலையத்தில் மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டார். அப்போது, அவரது விந்தணுக்களில் எபோலா அறிகுறி இன்னமும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவருக்கு இந்தியாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.
இந்த சம்பவத்தின் பின்னணியில், இன்று மக்களவையில் பேசிய சுகாதார அமைச்சர் ஜெ.பி.நட்டா, "எபோலா நோய் தொற்றுள்ள நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகள் சம்பந்தப்பட்ட நாட்டின் சுகாதார அமைச்சகத்தில் இருந்து பெற்ற 'நோ - எபோலா' சான்றிதழை வைத்திருப்பது கட்டாயம்.
எபோலா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள், தாங்கள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதில் இருந்து 90 நாட்கள்வரை இந்தியாவுக்கு வர வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இது தொடர்பான பயண அறிவிக்கை, ஐவரிகோஸ்ட், செனகல், நைஜீரியா, கானா, நியமி ஆகிய நாடுகளில் உள்ள தூதரங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது" என்றார்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top