தமிழகத்தில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பாதுகாவலர், உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில், இந்து சமய அறநிலையத் துறை மீதான மானியக் கோரிக்கை யில் முன்னாள் முதல்வர் ஜெய லலிதா 110 விதியின் கீழ் பல்வேறு திட்டங்களை அறிவித்தார். அதில், தமிழக அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் களில் பாதுகாவலர், உதவியாளர், சமையல்காரர் உள்ளிட்ட பணிகளில் தினக்கூலி மற்றும் தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரியும் ஊழியர் களுக்கு ஊதிய உயர்வு வழங்கப் படும் என்று கூறினார். இந்நிலையில் ஏற்கெனவே பணிபுரியும் 8,184 பணியாளர்களுக்கு தகுதி அடிப்படையில் பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு வழங்க அரசு முடிவு செய்து, அதற்காக 44.14 கோடி ரூபாய் கூடுதலாக வழங்கியது.
இதுமட்டுமன்றி கோயில் பாது காவலர், துப்புரவாளர், சமையல் காரர் போன்ற பணிகளுக்கு தமிழகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான காலிப் பணியிடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கு அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. இதன்பேரில் அந்தந்த பகுதிகளிலுள்ள கோயில் நிர்வாகங்களை அணுகி மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய லாம். இது தொடர்பான அறிவிப்பு கோயில் நிர்வாகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top