டாக்கா, நவ.23-

மேற்கு வங்காள மாநிலம், பர்த்வான் மாவட்டம் கராகார்க் நகரில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவரின் வீட்டில் கடந்த மாதம் 2-ம்தேதி குண்டு வெடித்தது. இதில் இருவர் பலியாகினர்.
பர்த்வான் குண்டு வெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதியின் மனைவி வங்காளதேசத்தில் கைது
பர்த்வான் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு வங்காளதேசத்தைச் சேர்ந்த தீவிரவாதிகளின் சதித்திட்டம்தான் காரணம் என்பது தேசியப் புலனாய்வு அமைப்பினர் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக தேடப்பட்டுவந்த வங்காளதேசம் மற்றும் மியான்மர் நாடுகளைச் சேர்ந்த முக்கிய குற்றவாளிகள் கைது செய்த தேசிய புலனாய்வு அமைப்பு போலீசார், அவர்களை விசாரணைக் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

வங்காளதேசத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் ஜமாத்துல் முஜாகிதீன் என்ற தீவிரவாத இயக்கத்தின் தலைவனான சாஜித் என்பவன் பர்த்வான் குண்டு வெடிப்புக்கு மூளையாக செயல்பட்டு வந்ததாக இந்த விசாரணையில் தெரியவந்தது.

மேலும், சாஜித்தின் மனைவியான படேமா பேகம் என்பவர் ஜமாத்துல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தின் பெண்கள் படை தலைவியாக செயல்பட்டு வருவதும் தெரிய வந்தது.

இந்த தகவலை தேசியப் புலனாய்வு அமைப்பினர் வங்காளதேச அதிகாரிகளுக்கு தெரிவித்து, இந்த இயக்கத்தை சேர்ந்த சில முக்கிய நபர்களின் கைபேசி எண்களையும் அளித்திருந்தனர். பர்த்வான் குண்டு வெடிப்பு வழக்கின் விசாரணைக்கு உதவும்படியும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

இதனையடுத்து, தேடுதல் வேட்டை நடத்திய வங்காளதேச புலனாய்வுத் துறை போலீசார் சாஜித்தின் மனைவியான படேமா பேகம் மற்றும் அவருடன் இருந்த மேலும் 3 பெண் தீவிரவாதிகளையும் டாக்கா அருகில் உள்ள சடர்கட் பகுதியில் இன்று கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து வெடிப் பொருட்களும், வெடிகுண்டு தயாரிப்பது தொடர்பான மூலப்பொருட்களும், ‘ஜிஹாதி’ புத்தகங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

அவரிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் இந்தியாவில் தங்கியிருந்த படேமா பேகம், மேற்கு வங்காளம் மாநில தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஷிமுலியா பகுதியில் 25-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு தீவிரவாத பயிற்சி அளித்துள்ளார் என்ற விபரம் தெரியவந்துள்ளது.

பர்த்வான் குண்டு வெடிப்பின்போது, தேடப்பட்டுவரும் சாஜித்துடன் படேமா பேகம் தங்கியிருந்ததாகவும் வங்காளதேச போலீசார் கூறினர்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top