காத்மாண்டு, நவ.23-

நேபாள அரசால் தேடப்பட்டு வந்த இந்தியாவை சேர்ந்த பெரும் குற்றவாளி ஒருவனை நேபாள போலீசார் சுட்டுக் கொன்றனர்.
மிகவும் தேடப்பட்ட இந்திய குற்றவாளியை நேபாள போலீசார் சுட்டுக் கொன்றனர்
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள மஹாராஜ்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவன் ஷஸ்ரான் கான். நேபாளத்தில் உள்ள ருபந்தேஹி மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு கொலை, கொள்ளை மற்றும் ஆள்கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக போலீசாரால் நீண்டகாலமாக தேடப்பட்டு வந்தான்.

இந்நிலையில், இதே மாவட்டத்துக்குட்பட்ட பிஷ்னுபுரா கிராமத்தில் இவன் பதுங்கியிருப்பதாக வந்த ரகசிய தகவலையடுத்து, அவன் தங்கியிருந்த வீட்டை நேற்று சுற்றிவளைத்து, முற்றுகையிட்ட போலீசார், உடனடியாக சரணடைந்துவிடும்படி அவனை எச்சரித்தனர்.

இந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாத ஷஸ்ரான் கானும், அவனது கூட்டாளிகளும் போலீசாரை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டனர்.

போலீசாரும் அந்த கும்பலை நோக்கி சுடத் தொடங்கினர். இந்த என்கவுன்டரில் ஷஸ்ரான் கான் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், அவனது கூட்டாளிகள் மூன்று பேர் சரணடைந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top