புதுடெல்லி,டிச. 2-

கடந்த 5-ந் தேதியன்று டெல்லியில் ’உபேர்’ வாடகைக் கார் நிறுவனத்தின் காரில் பயணித்த, பெண் ஒருவர் அதன் டிரைவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே இது போன்ற ஒரு சம்பவத்தில் ஈடுபட்ட அந்த  டிரைவர் தன் மீதிருந்த வழக்குகளை மறைத்து நன்னடத்தை சான்றிதழ் கொடுத்ததும் தற்போது தெரியவந்துள்ளது. இந்நிலையில் டெல்லியில் இருந்து 2 மணி நேரத் தொலைவில் உள்ள அலிகர் என்ற இடத்தில் ஒரே நாளில் லைசென்ஸ் கிடைப்பதாக கேள்விப்பட்டு அங்கு சென்ற தனியார் தொலைக்காட்சி நிறுவனம், லைசென்ஸ் பெறுவதற்கான நடைமுறைகளை மறைத்து வைக்கப்பட்ட கேமராவின் உதவியுடன் படம்பிடித்தது. அப்போது 200 ரூபாய்க்கு லைசன்ஸ் கிடைக்கும் அவலம் அம்பலமானது. 
கார் ஓட்டும் லைசென்ஸ் 200 ரூபாய்-இன்சூரன்சுக்கு 250 ரூபாய்: அம்பலப்படுத்தியது தனியார் தொலைக்காட்சி
அப்படிப்பட்ட ஒரு அலுவலகத்துக்கு சென்று அவசரமாக லைசன்ஸ் வேண்டுமென்று சொன்னதும், ”எந்த பிரச்சனையும் இல்லை, போலியான லைசென்ஸ் 300 ரூபாய்க்கு உடனே கிடைக்கும். உண்மையானது 500 ரூபாய், சுமார் இரண்டு வாரங்கள் எடுக்கும்”. என்று பதில் கிடைத்தது. வசிப்பிடத்துக்கான ஆதாரம் இல்லாத போதும், அவர்களுடைய பெயர், முகவரி, புகைப்படத்தை மட்டும் வாங்கிக்கொண்டு போனவரிடம், கார் இன்சூரன்சுக்கு எவ்வளவு என்று கேட்ட போது 350 ரூபாய் என்று சொல்லப்பட்டது. இரண்டு நிமிட பேரத்திற்குப் பிறகு லைசென்சுக்கு 200 ரூபாயும் கார் இன்சூரன்சுக்கு 250 ரூபாயும் என்று முடிவானது. 

சொன்னது போலவே இரண்டு மணி நேரம் கழித்து லைசென்ஸ் மற்றும் 14,580 ரூபாய் பிரீமியம் கட்டியதாக கார் இன்சூரன்சும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் வாகன போக்குவரத்து துறையை சீரமைக்கவேண்டியது அவசியம் என்பது தெளிவாகின்றது.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top