சோச்சி, நவ. 23–
நடப்பு சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே)– 5 முறை சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் (இந்தியா) மோதும் உலக செஸ் போட்டி ரஷியாவில் உள்ள சோச்சி நகரில் நடைபெற்று வருகிறது.
இன்று 11–வது சுற்று: கார்ல்சென் வெற்றியை ஆனந்த் தடுப்பாரா?
12 சுற்றுகளை கொண்ட இந்தப்போட்டியில் 10 சுற்றுகள் முடிந்துள்ளன. இதன்படி கார்ல்சென் 5.5–4.5 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலையில் உள்ளார்.
கார்ல்சென் 2 ஆட்டத்திலும், ஆனந்த் ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்று உள்ளார். 7 ரவுண்டுகள் ‘டிரா’வில் முடிந்தன. நேற்றைய ஓய்வுக்கு பிறகு 11–வது சுற்று ஆட்டம் இன்று நடக்கிறது.
இந்த சுற்றில் ஆனந்த் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளார். எஞ்சிய 2 சுற்றில் ‘டிரா’ செய்தாலே கார்ல்சென் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக்கொள்வார்.
அவரிடம் இருந்து சாம்பியன் பட்டத்தை தட்டி பறிக்க வேண்டுமானால் 2 ஆட்டத்திலும் ஆனந்த் வெல்ல வேண்டும். ஒரு ஆட்டத்தில் வென்று மற்றொரு ஆட்டத்தில் ‘டிரா’ செய்தால் சம புள்ளியுடன் ஆட்டம் பிரேக்கருக்கு செல்லும்.
இன்றைய 11–வது சுற்றில் ஆனந்த் கருப்பு நிற காய்களுடன் விளையாடுவது சவாலானதே. கார்ல்சென் வெற்றியை தடுக்க ஆனந்த் மிகவும் கடுமையாக போராட வேண்டும். 

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top