சிட்னி, நவ. 23–

ஆஸ்திரேலியா– தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 5–வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சிட்னியில் நடைபெற்றது.\
தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி ஆஸி. ஒருநாள் தர வரிசையில் முதல் இடத்தை பிடித்தது
டாஸ்’ வென்ற தென்ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர் அம்லா 18 ரன்னில் மேக்ஸ்வெல் பந்தில் ஆட்டம் இழந்தார். மற்றொரு தொடக்க வீரர் டி காக் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அதன்பின் வந்த பெகார்டியன் 63, ரஷ்சவ் 51 ரன்கள் எடுக்க தென்ஆப்பிரிக்கா 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 280 ரன்கள் எடுத்தது.

பின்னர் டக்வொர்த் லிவிஸ் விதிப்படி ஆஸ்திரேலியா அணி வெற்றிக்கு 275 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்ஞ் 76, வாட்சன் 82, ஸ்மித் 67 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா 47.1 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 275 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ளது.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top