அகமதாபாத், டிச.10-

குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா நகரின் கரேலிபாக பகுதியில் இருக்கும் ஒரு தனியார் பள்ளியை சேர்ந்த சுமார் 50 மாணவ-மாணவியர் கடந்த பிப்ரவரி மாதம் ஜம்புகோடா வனவிலங்கு காப்பகத்துக்கு ’பிக்னிக்’ பயணம் சென்றனர்.
விபத்தில் காயமடைந்த குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய 13 வயது மாணவிக்கு ஜனாதிபதியின் வீரதீர விருது
காப்பகத்தை சுற்றிப்பார்த்து விட்டு திரும்புகையில், காட்டுப்பாதை வழியாக அவர்கள் வந்த பஸ், இன்னொரு வாகனத்தின் மீது மோதியது. இதனால், சாலையில் இருந்து விலகி, பக்கவாட்டில் உள்ள மண்பாதையில் சறுக்கிச் சென்ற அந்த பஸ் ஒருபக்கமாக சரிந்தது.

இந்த விபத்தில் காயமடைந்த மாணவ-மாணவிகள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தபோது, இந்தக் குழுவில் சென்ற ஒன்பதாம் வகுப்பு மாணவியான ஸீல் மராத்தே என்ற 13 வயது சிறுமி, பலத்த அடிபட்டு சுவாசிக்க முடியாமல் மூச்சுத் திணறியபடி மரணத்தின் விளிம்பை தொட்டுக் கொண்டிருந்த 3 பேர்களின் வாயோடு தனது வாயை வைத்து, செயற்கை முறையில் சுவாசக் காற்றை செலுத்தி, அவர்களின் இதயப்பகுதியில் லேசாக குத்தி, அந்த 3 பேரின் உயிரையும் ஸீல் மராத்தே காப்பாற்றினார்.

இச்சம்பவம் தொடர்பான செய்திகள் அப்போது உள்ளூர் ஊடகங்களில் ஒளிபரப்பாகியதை அடுத்து, பள்ளியளவிலும், உள்ளூர் முழுவதும் ஸீல் மராத்தே பிரபலம் அடைந்தார். இந்நிலையில், டெல்லியில் உள்ள குழந்தைகள் நலனுக்கான இந்திய கவுன்சில் இவரது தந்தைக்கு ஒரு கடிதம் அனுப்பி இருந்தது.

அந்த கடிதத்தை இன்று பெற்றுக் கொண்ட ஸீல் மராத்தே-வின் தந்தை மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனார். வரும் ஜனவரி மாதம் 26-ம் தேதி டெல்லியில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் வீரதீர செயல்களை புரிந்த சிறுவர்-சிறுமியருக்கான விருதுக்கு ஸீல் மராத்தே தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது.

வதோதராவில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா மெமோரியலில் யோகாவும் பயின்றுவரும் ஸீல் மராத்தே-வின் தந்தை இது தொடர்பாக தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியபோது, ‘ஆபத்து காலத்தில் மற்றவர்களுக்கு எப்படியாவது உதவி செய்ய வேண்டும் என்னும் மற்ற குழந்தைகளுக்கான முன்னுதாரணத்தை எனது மகள் ஏற்படுத்தி இருக்கிறாள்’ என்று பெருமைப்பட கூறினார்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top