ஜம்மு, டிச. 10-

ஜம்மு- காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. 4-ம் கட்ட தேர்தலுக்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஜம்முவில் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.
மதச்சார்பின்னை, ஜனநாயகத்தை பா.ஜனதா மதிக்கவில்லை: சோனியா
இன்று பிரசார பேரணியில் அவர் பேசும்போது ‘‘சமீபத்தில் டெல்லி தேர்தல் பிரசாரத்தில் பேசிய மத்திய மந்திரி தகாத வார்த்தையை பயன்படுத்தினார். இதற்கு எதிராக பா.ஜனதா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்கள் மதத்தின் பெயரால் மக்களை சண்டையிட விரும்புகிறார்கள். பா.ஜனதா மதச்சார்பின்னை, ஜனநாயகத்தை மதிக்கவில்லை. அவர்களுடைய சாதுக்கள், ஒரு குறிப்பிட்ட சமுகத்திற்கு எதிரான தகாத வார்த்தைகளை கூறி சமுதாயத்தை பிரிக்க பார்க்கிறார்கள்.

காஷ்மீரி பண்டிட்ஸ் மற்றும் மற்ற குடிபெயர்ந்தவர்களுக்கு அமைதியான சூழ்நிலையில் கௌரவமான வாழ்வை ஏற்படுத்தி கொடுக்க நாங்கள் உறுதியாக உள்ளோம். நாங்கள் சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மக்கள், தலித்துக்கள், மைனாரிட்டி மற்றும் பெண்கள் ஆகியோருக்கு உழைக்க இருக்கிறோம். அவர்களுக்கு அதிகாரம் வழங்க பாடுபடுவோம்.

ஊழலை எதிர்த்து போரிட, சாதாரண மனிதனும் கையில் எடுக்கும் கருவியாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை கொடுத்தோம்’’ என்றார்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top