லக்னோ, டிச. 10-

உத்தர பிரதேசத்தில் வழக்கத்திற்கு மாறாக இந்த ஆண்டு கடும் பனிப்பொழிவு உள்ளது. இந்த பனி மூட்டத்தால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
உ.பி.யில் கடும் பனிப்பொழிவால் சாலை விபத்து: 7 பேர் பலி
எதிரே வரும் வாகனம் தெரியாத அளவிற்கு கடும்பனி மூட்டமாக காணப்பட்டது. நேற்றிரவு பிஜ்னூர் மாவட்டம் தம்பூர் பகுதியில் வேன் ஒன்று லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் 7 பேர் உயிரிழந்தனர். 3 பேர் காயம் அடைந்தனர்.

பல ரெயில்கள் 12 மணி நேரத்திற்குமேல் தாமதமாக வந்து சென்றன. உத்தர பிரதேசத்தின் கிழக்குப் பகுதியின் பெரும்பாலான இடத்தில் பனி மூட்டம் அதிகமாக காணப்பட்டதாகவும், மேற்கு பகுதியில் சில இடங்களில் பனி மூட்டம் காணப்பட்டதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

‘‘குறைந்தபட்சமாக முசாபர்நகரில் வெப்பநிலை 2.1 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியிருந்தது. உ.பி.யின் கிழக்குப் பகுதியில் பனி மூட்டம் அதிகமாக காணப்படும். மாநிலத்தின் சில பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம்’’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top