பெண் குழந்தை பெற்றுத் தராத காரணத்தால் கணவன் வீட்டாரால் விபச்சார விடுதியில் தள்ளப்பட்டதாக கொல்கட்டாவில் ஒரு பெண் புகார் அளித்துள்ளார்.மீட்கப்பட்ட பெண்

பெண் குழந்தை பெற்றுத் தராத காரணத்தால் தன்னுடைய புகுந்த வீட்டார் தன்னை விபச்சார விடுதியில் தள்ளிவிட்டதாக கொல்கட்டாவில் ஒரு பெண் அளித்த புகார் குறித்து தாம் விசாரித்து வருவதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
தனக்கு மூன்று ஆண் குழந்தைகள் தொடர்ந்து பிறந்துள்ளதாகவும், பிற்காலத்தில் பாலியல் தொழிலாளியாக வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றப் பெண் குழந்தையைப் பெற்றுத் தரும்படி தம்முடைய கணவன் குடும்பத்தினர் வலியுறுத்தியதாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.
பாலியல் தொழிலில் தள்ளப்படுவதற்கு முன்பாகவே, ஒரு தன்னார்வ நிறுவனத்தின் முயற்சியின் காரணமாக அவர் விபச்சார விடுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளார்.
தன்னுடைய கணவரின் குடும்பத்தினர், வீட்டிலுள்ள பெண்களை தொடர்ந்து விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தி வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top