சூதாட்ட வழக்கில் தான் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்படும் வரை ஐபிஎல் விவகாரங்களில் தலையிட மாட்டேன் என்று உச்ச நீதிமன்றத்தில் என்.சீனிவாசன் தெரிவித்தார்.
பிசிசிஐ தேர்தலில் போட்டியிட அனுமதி கோரி, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு ஒன்றில், சீனிவாசன் இந்த உறுதியை அளித்துள்ளார்.என்.சீனிவாசன் | கோப்புப் படம்
ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பான வழக்கு விசாரணையின்போது, உச்ச நீதிமன்றத்தில் என்.சீனிவாசன் தரப்பில் இன்று மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், "பிசிசிஐ தலைவராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், இவ்வழக்கில் நான் குற்றமற்றவர் என அறிவிக்கப்படும் வரை, ஐபிஎல் தொடர்பான எந்த விவகாரங்களிலும் தலையிடாமல் விலகி இருக்கத் தயாராகவுள்ளேன். ஆகையால், நான் பிசிசிஐ தலைவர் பதவிக்கான தேர்தலில் பங்கேற்க அனுமதி வழங்க வேண்டும்" என்று சீனிவாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
முன்னதாக, ஐபிஎல் கிரிக்கெட்டில் மேட்ச் பிக்ஸிங், சூதாட்டம் நடைபெற்றது தொடர்பான வழக்கின் விசாரணையும், மீண்டும் பிசிசிஐ தலைவராகப் பொறுப்பேற்பதற்கு அனுமதி கோரி என்.சீனிவாசனின் கோரிக்கை தொடர்பான மனுவும் உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை அன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ். தாகுர், இப்ராஹிம் கலிபுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு, "பிசிசிஐயின் தலைமைப் பொறுப்பிலிருந்து ஒதுங்கியிருக்கும் நிலையில், அந்த அமைப்பின் சார்பில் நடைபெறும் கூட்டங்களில் என்.சீனிவாசன் பங்கேற்று வருகிறார். தேர்தலை தாமதப்படுத்துவது தொடர்பாக நடைபெற்ற பிசிசிஐ செயற்குழு கூட்டத்திலும் அவர் பங்கேற்றுள்ளார்
ஐபிஎல் கிரிக்கெட் மேட்ச் பிக்ஸிங் மற்றும் சூதாட்டம் தொடர்பாக நீதிபதி முகுல் முத்கல் அளித்துள்ள அறிக்கை தொடர்பாக பிசிசிஐ நியாயமாகவும், நடுநிலையுடனும் விசாரிக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால், தேசத்தை ஏமாற்றியதாக கருத வேண்டியிருக்கும்.
இந்த விசாரணையை நடத்தவுள்ள ஒழுங்கு நடவடிக்கைக் குழு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான புகார் உண்மையாக இருக்கும்பட்சத்தில் அவர்களுக்கு வழங்க வேண்டிய தண்டனையை தீர்மானிக்கலாம்.
இரட்டை ஆதாயம் பெறும் விவகாரம் தொடர்பாகவும் ஆலோசித்து, அதைத் தடுப்பதற்கான விதிமுறைகளை கொண்டு வருவது பற்றி முடிவு எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதற்கு என்.சினிவாசன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கூறும்போது, "என்.சீனிவாசன் பிசிசிஐ தலைவர் பதவியிலிருந்துதான் ஒதுங்கியிருக்கிறார். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக தொடர்ந்து பதவியில் உள்ளார். அந்த அடிப்படையில்தான் அவர் பிசிசிஐ கூட்டங்களில் பங்கேற்று வருகிறார்" என்று விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top