ஸ்ரீநகர், டிச. 9-

ஜம்மு- காஷ்மீரில் கடந்த இரண்டு கட்ட தேர்தலில் 70 சதவீதத்திற்கு மேல் வாக்குப்பதிவானது. ஆனால், இன்று நடைபெற்ற 3-ம் கட்ட தேர்தலில் 58 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது.
3-ம் கட்ட தேர்தல்: காஷ்மீரில் 58 சதவீதம்- ஜார்க்கண்டில் 61 சதவீதம் வாக்குகள் பதிவு
87 தொகுதிகள் கொண்ட ஜம்மு- காஷ்மீர் சட்டசபைக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால் தேர்தலுக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏற்கனவே, இரண்டு கட்ட தேர்தல் முடிந்த நிலையில் இன்று 3-ம் கட்ட தேர்தல் 16 தொகுதிளுக்கு நடைபெற்றது.

இன்று பாரமுல்லா, பட்காம், புல்வாமா மாவட்டங்களில் ராணுவம் மற்றும் போலீசாரின் உச்சக்கட்ட பாதுகாப்பில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை தேர்தல் முடிந்தவுடன் 58 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்ததாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சமீபத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். அதில் 23 பேர் கொல்லப்பட்டனர். மேலும், தேர்தலை சீர்குலைக்க சில இடங்களில் வாக்குச்சாவடிகள் மீது பெட்ரோல் குண்டுகளும், கையெறி குண்டுகள் தாக்குதலும் நடைபெற்றது.

இதேபோல் ஜார்க்கண்டில் இன்று தேர்தல் நடைபெற்ற 17 தொகுதிகளில், 61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சில்லியில் 74.77 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக ராஞ்சியில் 44.44 சதவீத வாக்குகளும் பதிவாகியிருப்பதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வருகிற 14–ந்தேதி 4–ம் கட்ட தேர்தலும், 20–ந் தேதி 5–ம் கட்ட தேர்தலும் நடைபெற உள்ளது. 23–ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top