பாட்னா, டிச.9-

பீகார் மாநிலத்தின் ரோட்டாஸ் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரவி சங்கர் குமார். இங்குள்ள சசாரம் நகராட்சிக்கு நடைபெற்ற தேர்தலில் 25-வது வார்ட்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர், தற்போது கவுன்சிலராக உள்ளார்.
3-வது குழந்தை இருப்பதை மறைத்து போட்டியிட்ட கவுன்சிலரின் தேர்வு ரத்து
2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிடக் கூடாது என பீகார் மாநில தலைமை தேர்தல் ஆணையம் கடந்த 1-4-2008 அன்று உத்தரவிட்டிருந்தது. இந்த அறிவிப்பை பொருட்படுத்தாமல், 4-3-2008 அன்று தனக்கு மூன்றாவது குழந்தை பிறந்த தகவலை வேட்பு மனுவில் மறைத்து, ரவி சங்கர் குமார் போட்டியிட்டதாக அவரது அரசியல் எதிரிகள் மாநில தேர்தல் கமிஷனில் புகார் அளித்தனர்.

இதனையடுத்து, இந்த விவகாரத்தில் நடத்தப்பட்ட விசாரணையில் மூன்றாம் குழந்தை பிறந்த விபரத்தை ரவி சங்கர் குமார் மறைத்திருப்பது உறுதிசெய்யப்பட்டது. எனவே, அவரது தேர்வு ரத்து செய்யப்படுவதாக இன்று உத்தரவிட்ட தேர்தல் கமிஷன், ரவி சங்கர் குமார் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யும்படி ரோட்டாஸ் மாவட்ட மாஜிஸ்திரேட்டுக்கும் உத்தரவிட்டுள்ளது.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top