திருப்பதியில் இலங்கை அதிபர் ராஜபக்சே சாமி தரிசனம் செய்ய வருகை தந்துள்ள நிலையில், ராமேசுவரம் மீனவர்களை கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையினர் வலைகளை அறுத்தெறிந்து விரட்டியடித்த சம்பம் தமிழக மீனவர்களை அதிர்ச்சியில் அடையச் செய்துள்ளது.
ராமேசுவரத்திலிருந்து 600-க்கும் மேற்பட்ட விசைப்படகில் 2,500க்கும் மேற்பட்ட மீனவர்கள் திங்கள்கிழமை கடலுக்குச் சென்றனர்.கோப்புப் படம்.
செவ்வாய்கிழமை அதிகாலை கச்சத்தீவு அருகே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது சிறிய ரக ரோந்துக் கப்பல்களில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் வலைகளை அறுத்தெறிந்ததுடன் இப்பகுதியில் மீன் பிடிக்கக்கூடாது என விரட்டி அடித்தாக கரை திரும்பிய மீனவர்கள் கூறினர்.
இதனால் மீன்பாடு இல்லாத பகுதிகளுக்கு சென்று சில மீனவர்கள் மீன்பிடித்தனர். சிலர் மீன் பிடிக்காமலேயே கரை திரும்பினர்.
இதுகுறித்து செய்தியாளரிடம் ராமேசுவரம் மீனவப் பிரநிதிகள் கூறுகையில், "திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய வருகை தரும் இலங்கை அதிபர் ராஜபக்சேவை தமிழக மீனவர்கள் யாரும் எதிர்க்கவில்லை.
தமிழக அரசியல்வாதிகள் ராஜபக்சேவின் வருகையை எதிர்தால் இந்திய - இலங்கை இருநாட்டு மீனவர்களின் நலன் பாதிக்கப்படும்.
இலங்கை அதிபர் ராஜபக்சே சாமி தரிசனம் செய்ய திருப்பதிக்கு வருகை தரும் அன்றும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினரால் தாக்குதலுக்கு உள்ளாக்கி வலைகளையும் அறுத்தெறிந்துள்ளது கண்டனத்திற்குரியது. இந்தச் சம்பவம் தமிழக மீனவர்களை அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கின்றது" என்றார்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top