புதுடெல்லி, டிச. 9-

நேதாஜியின் மரணம் தொடர்பான மர்மங்களை மத்திய அரசு வெளியிட வேண்டுமென்று மாநிலங்களவையில் எம்.பி.க்கள் வலிறுத்தியுள்ளனர்.
நேதாஜி மரணம் குறித்த தகவல்களை அரசு வெளியிடவேண்டும்: மாநிலங்களவையில் எம்.பி.க்கள் வலியுறுத்தல்
இன்று மாநிலங்களை கூடியதும் பூஜ்ய நேரத்தின்போது, திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி.யான சுகேந்து சேகர் ராய் இக்கேள்வியை முன் வைத்து பேசினார். அப்போது ஆட்சிக்கு வருவதற்கு முன், நேதாஜி தொடர்பான ஆவணங்கள் வெளிப்படையாக வைக்கப்படும் என கூறிய பா.ஜ.க. தற்போது தனது வாக்குறுதியிலிருந்து பின் வாங்குவதாக அவர் குற்றம் சாட்டினார்.

நேதாஜி குறித்த மர்மத்தை விலக்கும் வகையில், அவரது மரணம் தொடர்பான ஆவணங்களை வெளியிட மத்திய அரசு மறுத்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். நேதாஜிக்கு என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள நாட்டு மக்களுக்கு உரிமை உள்ளது. அவரது மரணம் தொடர்பான விவரங்கள் அடங்கிய 39 கோப்புகளையும் வெளிப்படையாக தேசத்தின் ஆவண காப்பகத்தில் வைக்கவேண்டும் என்றும் ராய் வலியுறுத்தினார்.

இதே கோரிக்கையை ஆதரித்து இடது மற்றும் வலதுசாரி எம்.பி.க்கள் மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆகியோரும் பேசினர். கடந்த இரு தினங்களுக்கு முன் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும் இதே கோரிக்கையை வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top