புவனேஸ்வர், டிச.9–
சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டியில் இந்திய அணி இன்றைய 3–வது ஆட்டத்தில் நெதர்லாந்தை எதிர்கொள்கிறது. இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டம் டென் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் ஜெர்மனியிடம் 0–1 என்ற கணக்கிலும், 2–வது ஆட்டத்தில் அர்ஜெண்டினாவிடம் 2–4 என்ற கணக்கிலும் தோற்றது.சாம்பியன்ஸ் ஆக்கி ஹாட்ரிக் தோல்வியை இந்தியா தவிர்க்குமா?
இதனால் இன்றைய ஆட்டத்தில் ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்க வேண்டிய கட்டாயம் இந்திய அணிக்கு உள்ளது.
இன்று நடைபெறும் மற்ற ஆட்டங்களில் அர்ஜெண்டினா–ஜெர்மனி, இங்கிலாந்து–பெல்ஜியம், ஆஸ்திரேலியா –பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top