காம்னா ஜெத்மலானி தமிழில் ‘இதயதிருடன்’, படத்தில் நாயகியாக நடித்தார். ‘ராஜாதிராஜா’, ‘காசே தான் கடவுளடா’ போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். எனக்கு திருமணம் முடிந்து விட்டது: காம்னா ஜெத்மலானி

காம்னாவுக்கு ரகசிய திருமணம் நடந்துள்ளது. இதனை அவரே அறிவித்து உள்ளார். சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றபோது விரலில் இரண்டு மோதிரம் அணிந்து இருந்தார். திருமணமான பெண்கள் தான் இப்படி மோதிரம் அணிவது உண்டு.

இதுகுறித்து கேட்டபோது திருமணம் நடந்த தகவலை வெளியிட்டார். இது குறித்து அவர் கூறியதாவது:– எனக்கு திருமணம் முடிந்து விட்டது. கணவர் பெயர் சுராஷ். பெங்களூருரில் என்ஜினீயராக இருக்கிறார். குடும்ப வாழ்க்கை சந்தோசமாக இருக்கிறது. கணவருக்கு ருசியான உணவுகள் சமைத்து கொடுத்து நேரத்தை செலவிடுகிறேன். மாமியாரையும் கவனித்துக் கொள்கிறேன் என்றார்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top