சிட்னி, நவ. 27–
ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியில் நேற்று முன்தினம் நடந்த உள்ளூர் போட்டியின் போது நியூ சவுத் வேல்ஸ் வீரர் சீன் அப்பாட் மணிக்கு 140 கி.மீ வேகத்தில் வீசிய பவுன்சர் பந்து தெற்கு ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் பிலிப் ஹியூக்ஸ் தலையை தாக்கியது.
ஹெல்மெட் அணிந்திருந்த போதிலும் எகிறி வந்த பந்து ஹியூக்ஸ் தலையின் இடது பக்கத்தில் பலமாக தாக்கியது.
இதில் சுயநினைவை இழந்த அவர் செயிண்ட் வின்சென்ட் மருத்துவ மனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றார்.

பவுன்சர் பந்து தாக்கியதில் மரணம் அடைந்த ஹியூக்சுக்கு 25 வயது தான் ஆகிறது. அவர் 26 டெஸ்ட், 25 ஒருநாள் போட்டி மற்றும் ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடி உள்ளார்.
2009–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமான அவர் கடைசியாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடினார்.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனார். அவர் கடைசியாக கடந்த மாதம் பாகிஸ்தானுக்கு எதிராக சர்வதேச போட்டியில் ஆடினார். டெஸ்டில் 1535 ரன்னும், ஒருநாள் போட்டியில் 826 ரன்னும் அவர் எடுத்துள்ளார். டெஸ்டில் 3 சதம் அடித்துள்ள அவரது அதிகபட்ச ஸ்கோர் 160 ரன் ஆகும். ஒருநாள் போட்டியில் 2 செஞ்சூரிகளை அடித்துள்ளார்.
ஹியூக்சின் மரணத்தால் கிரிக்கெட் உலகமே அதிர்ச்சி அடைந்து உள்ளது. அவரது குடும்பத்தினருக்கு ஆஸ்திரேலிய வீரர்களும், நிர்வாகிகளும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்
0 comments :
Post a Comment