பீஜிங், டிச.7-

கண்காணிப்பு, திட்டமிடுதல், மற்றும் நிலம், காடுகள், வேளாண் மேலாண்மை போன்ற பல்வேறு பயன்பாடுகளைக் கொண்ட சீனாவின் சிபெர்ஸ்-4 செயற்கைக்கோள், மார்ச்-4பி ராக்கெட் மூலம் தாய்வானில் உள்ள ஏவுதளத்திலிருந்து, இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
சீனாவின் சிபெர்ஸ்-4 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது
2002 நவம்பரில், சீனா-பிரேசில் ஆகிய நாடுகளுக்கு இடையேயான முதற்கட்ட ஒப்பந்தம், மேலும் இரண்டு செயற்கைக்கோள்களை ஏவும் பணிக்காக விரிவுபடுத்தப்பட்டது. அதில் ஒன்றான சிபெர்ஸ்-3, 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏவுதளத்திலேயே விபத்துக்குள்ளானதை அடுத்து, இரு நாடுகளின் கூட்டுத்தயாரிப்பில் இரண்டாம் தலைமுறையான சிபெர்ஸ்-4 உருவானது.

இந்திய நேரப்படி நண்பகல் 11:26 மணிக்கு ஏவப்பட்ட இந்த செயற்கைக்கோள் அதன் திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். 1988 இல் தொடங்கிய சீன-பிரேசிலிய புவி வள செயற்கைக்கோள் திட்டத்தில் உருவாக்கப்பட்ட செயற்கைக்கோள்களில் ஒன்று தான் சிபெர்ஸ்-4 என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top