நியூயார்க், டிச.7-

கிழக்கு இந்தோனேஷியாவில் கடலுக்கடியில், 6 ரிக்டர் அளவிற்கு வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிழக்கு இந்தோனேஷியாவில் கடும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவு
இந்தோனேஷியாவின் கிழக்குப் பகுதியிலுள்ள மலுக்கு தீவில் அமைந்திருக்கும், சாமுலாகி என்ற பகுதியிலிருந்து வடக்கு-வடமேற்காக 222 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி அமைந்திருந்தது. கடலுக்கு அடியில் 117 கிலோமீட்டர் ஆழத்தில் 6 ரிக்டர் அளவிற்கு வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காரணமாக, சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top