சென்னை, டிச. 7-

விப்ரோ 2014 மராத்தான் போட்டி இன்று காலை சென்னையில் தொடங்கியது. மூன்று விதமான போட்டிகளை கொண்ட இந்த மராத்தான் போட்டியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றார்கள்.
சென்னையில் விப்ரோ நடத்திய மராத்தான் போட்டி துவங்கியது: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
10 கி.மீ தூரத்திற்கான மராத்தான் போட்டி நேப்பியர் பாலத்தில் தொடங்கி, சாந்தோம், பட்டினப்பாக்கம், அடையாறு, மத்திய கைலாஷ் வழியாக தரமணியில் உள்ள சென்டரல் பாலிடெக்னிக் மைதானத்தில் நிறைவு பெறுகிறது. இதே போல் அரை மராத்தான் மற்றும் முழு மராத்தான் ஆகிய போட்டிகள் பறக்கும் ரெயில் நிலையம் அமைந்துள்ள கஸ்தூரிபாய் ரெயில் நிலையத்தில் துவங்கி தரமணி, சென்டரல் பாலிடெக்னிக் மைதானத்தில் நிறைவடைகிறது. இப்போட்டியில் மாற்றுத்திறனாளிகள், இளைஞர்கள், பெண்கள், வயதானவர்கள், வெளிநாட்டினர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்குபெற்று ஓடி வருகின்றனர். போட்டியில் பங்கேற்றவர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் மெரினா கடற்கரையிலும், எம்.ஆர்.சி. நகரிலும் டிரம்ஸ் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்றவர்களை பட்டினப்பாக்கம் பகுதியில் வயதான தம்பதியர் கைதட்டி உற்சாகப்படுத்தினர். போட்டியில் பங்கேற்றவர்களுக்கு உதவும் வகையில் பழச்சாறு, வாழைப்பழம் மற்றும் குடிநீர் ஆகியவை பல்வேறு இடங்களில் வழங்கப்பட்டன. இந்த மராத்தான் போட்டியையொட்டி போக்குவரத்து மாற்றத்தை செய்த காவல்துறை விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top