கேரளத்தில் செயல்படும் வங்கி வர்த்தகத்தில் 13 சதவீத அளவில் இருப்பது, ரெமிட் டன்ஸிலும் இந்திய அளவில் கணிசமான பங்கினை வைத்திருப்பது பெடரல் வங்கி. இந்த வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஷியாம் சீனிவாசனை, கொச்சியில் இருக்கும் வங்கியின் தலைமையகத்தில் சந்தித்தோம். ‘தி இந்து’வுக்கு அளித்த பிரத்யேக சிறப்புப் பேட்டியிலிருந்து...நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ஷியாம் சீனிவாசன்
வங்கி வட்டிவிகிதங்கள் அதிகமாக இருப்பது, வங்கிச் சேவைகளில் பாதிப்பை ஏற்படுத்துமா?
பெரிய பாதிப்பு ஏதுமில்லை. தங்கள் டெபாசிட்டுக்கு வட்டி அதிகரித்தால் புகார் செய் யாத வாடிக்கையாளர்கள், அதற்கு வட்டி குறைந்தாலோ, கடனுக் கான வட்டி அதிகரித்தாலோ கேள்வி யெழுப்புகின்றனர். அது அவர் களது உரிமை. எனினும், வட்டி விகிதிம் அதிகரிப்பதற்கு பணவீக்கம் தான் காரணம் என்பதை வாடிக் கையாளர்கள் உணரவேண்டும்.
ரிசர்வ் வங்கி, பேமென்ட் வங்கி கள் மற்றும் சிறிய வங்கிகள் தொடங்கு வதற்கான உரிமங்களை வழங்க முடிவு செய்திருக்கிறது. இதனால் உங்களுக்கு பாதிப்பு ஏற்படுமா?
நாட்டில் ஒவ்வொரு குடி மகனுக்கும் வங்கிக்கணக்கு இருக்கவேண்டும். அனைவருக்கும் வங்கிச் சேவை எளிதாகக் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் ரிசர்வ் வங்கி இத்தகைய கொள்கை களை வகுத்துவருகிறது. குக்கிராமப்பகுதிகளிலும் வங்கிக் கிளைகள் உருவாகவேண்டும் என்பதே ரிசர்வ் வங்கியின் புதிய கொள்கையின் நோக்கம். பெரிய நிறுவனங்கள் வளரும். அவையும் சேர்ந்து வளரும். எங்களுக்கு அதனால் பாதிப்பு ஏற்படாது.
மேலும், நாங்கள் பெரிய வங்கிகளுடன் மோதி வருகிறோம். அதனால் சிறிய வங்கிகளுக்கான உரிமம் வழங்கப்பட்டு, அவை செயல்பாட்டுக்கு வரும்நிலையில் கூட, ஏற்கெனவே வளர்ந்துவி்ட்ட எங் களுக்கு, அவர்களால் பாதிப்பு இருக்காது. ஆனால், நாடு முழு வதும் இல்லாவிட்டால் கூட, சிறிய பகுதிகளில், சற்று பாதிப்பு இருக்க வாய்ப்புண்டு. உதாரணத்துக்கு, ஒரு சிறிய பகுதியில் 30 கிளை களை அவர்கள் தொடங்கி அதிக சலுகைகள் தரமுடியும். அது போன்ற சமயங்களில் பெரிய வங்கிகளுக்கு சற்று பாதிப்பு இருக்கலாம். ஆனால், நாடு முழு வதும் பார்க்கும்போது வர்த்தகம் பெருமளவில் பாதிக்காது.
வெளிநாட்டுச் செயல்பாடுகள் குறித்து….?
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பணவரத்து (ரெமிட்டன்ஸ்) அளவில் 8% பெடரல் வங்கி மூலமாகவே வருகிறது. உதாரணத்துக்கு, வெளிநாடு வாழ் இந்தியர் மூலம் நூறு ரூபாய் அனுப்பப்பட்டால் அதில் ரூ.8 எங்கள் வங்கி வழியாகத்தான் வருகிறது. இந்தியாவுக்கு ஒரு ஆண்டில் ரூ.7 ஆயிரம் கோடி முதல் ரூ.7,500 கோடி வரை பணம், வெளிநாடு வாழ் இந்தியர்களால் அனுப்பப்படுகிறது. அதில், ரூ.650 கோடி எங்கள் வங்கி மூலமாக வருவது குறிப்பிடத்தக்கது. இதற்காக, பணப்பரிவர்த்தனை அமைப்புகளுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது. அபுதா பியில் ஒரு தொடர்புக் கிளை உள்ளது. மேலும், துபாயில் விரைவில் ஒரு அலுவலகத்தைத் தொடங்குவதற்கான பணிகள் நடந்துவருகின்றன.
பெடரல் வங்கியின் வருவாய் எதன் மூலம் அதிகமாகக் கிடைக்கிறது? உங்கள் வங்கியின் வாராக்கடன் விகிதம் எப்படி உள்ளது?
எங்களுக்கு 80% முதல் 90% வரையிலான வருவாய், வட்டி மூலமே கிடைக்கிறது. வாராக்கடன் வீதம் கட்டுக்குள் உள்ளது. நாட்டில் வங்கிகளின் சராசரி வாராக்கடன் விகிதம் 2.5% ஆகும். ஆனால் பெடரல் வங்கியினுடையது வெறும் 0.6% மட்டுமே. நாங்கள் சில்ல றைக்கடன், குறு மற்றும் நடுத்தரத்தொழில்களுக்கான கடன் களைத் தருகிறோம். ஆனால், பெரிய நிறுவனங்களுக்கு பெரும் தொகையைக் கடனாகத் தருவதைக் குறைத்துக்கொள்கிறோம். இதனால் சில இடங்களில் வளர்ச்சி பாதிக்கப்படுவது உண்மை.ஆனால், வாராக்கடன் வீதம் கட்டுக் குள் இருக்க இது உதவுகிறது.
ஏடிஎம் பயன்பாட்டுக்கு பணப் பிடித்தம் செய்யும் புதிய விதியை ஆர்பிஐ விதித்திருக்கிறதே?
இதனால் வாடிக்கையாளர்கள் பலமுறை பணம் எடுப்பது குறை யும். ரூ.300, ரூ.500 என எடுத்த வர்கள், இனி ஆயிரங்களில் பணம் எடுப்பார்கள். ஆனால், நாங்கள் மற்ற வங்கிகளின் வாடிக்கை யாளருக்கும் சலுகை அளிக்கும் விதமாக, எங்களது ஏடிஎம்ல் பணம் எடுக்கும் வேறு வங்கியின் வாடிக் கையாளரிடம் கூட தொகை எது வும் கூடுதலாக வசூலிப்பதில்லை.
எங்களுக்கு நிறைய ஏடிஎம்-கள் இல்லை. ஆனால் எங்கள் ஏடிஎம்-களுக்கு மற்ற வாடிக்கை யாளர்களை வரவழைப்பதற் கான ஏற்பாடு இது. அதன் மூலம் எங்கள் வங்கியின் சேவை கள் பற்றி அவர்கள் அறிந்து கொள்ள வழியேற்படும்.
கடன் வளர்ச்சி விகிதம் எப்படி இருக்கிறது?
இந்த நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் பெடரல் வங்கி, இத்தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்து வங்கிகளின் (கிரெடிட்) சராசரி வளர்ச்சி விகிதத்தைக் காட்டி லும், நான்கு மடங்கு அதிகம் வளர்ச்சி இருக்கிறது. இதை தக்க வைத்துக் கொள்ள நாIங்கள் கடுமையாக உழைக்கவேண்டும்.
உங்கள் நிறுவனத்துக்கு விளம்பரத் தூதுவர்கள் நியமிக்கப்படவில்லையே?
இன்று பிரபலமாக இருக்கும் ஒருவர் நாளை ஏதாவது பிரச்சி னையில் சிக்குவார். அதனால், யாரோ ஒருவரை நாங்கள் நம்புவ தில்லை. எங்களது 11 ஆயிரம் ஊழியர்கள்தான் எங்களது விளம்பரத் தூதர்கள். அதே நேரத்தில் தொலைக்காட்சிகளில் விளம்பரங்களை வெளியிட்டு வருகிறோம். மாறாக, கேரளத்தில் நடக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டி, ஐஎஸ்எல் போட்டிக்கான டிக்கெட்டினை நாங்கள் மட்டுமே விற்கமுடியும். இதில் எங்களுக்கு ஆன்லைனிலும், மைதானத்திலும் விளம்பரம் கிடைக்கிறது.
வங்கி வாடிக்கையாளர்கள் எண்ணிக் கையை அதிகரிக்க என்ன உத்தி யைக் கையாள்கிறீர்கள்?
எங்களது பிரதிநிதிகள், வீடுக ளுக்கே நேரடியாக சென்று வாடிக் கையாளர்களைச் சேர்க்கிறார் கள். மேலும், இப்போதெல்லாம், ஆன்லைன் மற்றும் மொபைல் பேங்கிங் ஆகியவற்றில் பரிவர்த்த னைகள் அதிகரித்துவிட்டது. அதனால் இனி அவற்றில்தான் அதிக கவனம் செலுத்தப்போகி றோம். நகரப்பகுதிகளில் புதிய கிளைகளைத் தொடங் காமல், வங்கிகள் இல்லாத ஊரகப் பகுதிகளில் மட்டுமே இனி புதிய கிளைகளை அதிகளவில் தொடங்க முடிவெடுத்திருக்கிறோம்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top