‘தி டைம்ஸ் உயர் கல்வி’ பத்திரிகை வெளியிட்டுள்ள சிறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலில் இந்திய அளவில் முதலிடத்தை பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கல்வி நிறுவனம் (ஐ.ஐ.எஸ்.சி) பெற்றுள்ளது.
சிறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலை தி டைம்ஸ் உயர் கல்வி’ பத்திரிகை ஆண்டுதோறும் வெளியிடுகிறது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா உள்பட 22 வளரும் நாடுகளில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் முதலிடத்தை சீனாவின் பீகிங் பல்கலைக்கழகம் பெற்றுள்ளது. 25-வது இடத்தை இந்திய அறிவியல் கல்வி நிறுவனமும் (இந்திய அளவில் முதலிடம்), 37-வது இடத்தை மும்பை ஐ.ஐ.டி.யும், 38-வது இடத்தை ரூர்க்கி ஐ.ஐ.டி.யும். 39-வது இடத்தை சண்டிகரின் பஞ்சாப் பல்கலைக்கழகமும், 43-வது இடத்தை காரக்பூர் ஐ.ஐ.டி.யும், 44-வது இடத்தை சென்னை ஐ.ஐ.டி.யும் பெற்றுள்ளன.
இது தவிர டெல்லி ஐ.ஐ.டி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், கான்பூர் ஐ.ஐ.டி, அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம், குவாஹாட்டி ஐ.ஐ.டி. ஆகியவை முறையே 56, 71, 74, 78, 98-வது இடங்களைப் பெற்றுள்ளன.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top