மும்பையில் இன்று நடைபெறும் இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் மும்பை சிட்டி எப்.சி. அணியும், அட்லெடிகோ டி கொல்கத்தா அணியும் மோதுகின்றன.
இதுவரை 12 ஆட்டங்களில் விளையாடி 12 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருக்கும் மும்பை அணி ஏறக்குறைய அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்டது. ஒருவேளை புள்ளிகள் பட்டியலில் முன்னணியில் இருக்கும் அணிகள் அதிர்ச்சி தோல்வியை சந்தித்து, அதேநேரத்தில் மும்பை அணி கடைசி இரு ஆட்டங்களிலும் வெல்லும்பட்சத்தில் அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு ஏற்படலாம். அப்படிப்பட்ட கடைசிக் கட்ட வாய்ப்பை தக்கவைக்க, பலம் வாய்ந்த அணியான கொல்கத்தாவை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது மும்பை.
கடைசி 3 ஆட்டங்களில் எதிரணி களிடம் 9 கோல்களை வாங்கியுள்ள மும்பை அணியில் முன்னணி வீரர் களான நிகோலஸ் அனெல்கா, ஆன்ட்ரே மோரிட்ஸ் ஆகியோர் காயம் அடைந்துள்ளது அந்த அணிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இன்றைய ஆட்டம் வாழ்வா, சாவா ஆட்டம் என்பதால் அனெல்கா களமிறங்குவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மோரிட்ஸ் இன்றைய ஆட்டத்தில் விளையாட வாய்ப்பில்லை.
ஆனால் 18 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருக்கும் கொல்கத்தா அணியோ இந்த போட்டியில் வென் றாலே அரையிறுதியை உறுதி செய்து விடும். கொல்கத்தா அணியின் ஆக்ரோஷமான ஆட்டம் வீரர்களுக்கு விருந்தளிப்பதாக இருந்தாலும், அந்த அணி கடைசியாக விளையாடிய 8 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வென்றுள்ளது. அந்த அணியின் மிட்பீல்டர் ஜோப்ரே கொன்ஸாலெஸ் காயம் காரணமாக இந்த ஆட்டத்தில் விளையாடமாட்டார்.
முன்னணி வீரர்கள் இடம்பெற்றி ருந்தாலும், கொல்கத்தா அணி பெரிய அளவில் கோலடிக்காதது கவலை யளிக்கிறது. இதுவரை 12 ஆட்டங் களில் விளையாடியுள்ள அந்த அணி 14 கோல்களை மட்டுமே அடித்திருக் கிறது. மொத்தத்தில் கொல்கத்தா அரையிறுதிக்கு முன்னேறவும், மும்பை அணி அரையிறுதி வாய்ப் பைதக்கவைக்கவும் போராடும். எனினும் கொல்கத்தா அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம்.
போட்டி நேரம்: இரவு 7 நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top