பிஹாரில் உள்ள ஒரு கிராமத்தில் நான்கு சகோதரர்களால் பலாத் காரம் செய்யப்பட்டதாக கூறப்படும் இளம்பெண் ஒருவர் தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.
நியாயம் கேட்டு இந்த விவ காரம் கிஷன்கஞ்ச் மாவட்டம் பக்கோலா பலஷ்மானி கிராமத் தில் பெரியோர் அடங்கிய பஞ்சாயத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
அந்தக் கூட்டத்தில் ரூ.50 ஆயிரம் வாங்கிக்கொண்டு கருவை சிதைத்துவிடும்படி அந்த பெண்ணுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை காவல் துறையினர் நேற்று தெரிவித்தனர்.
கிஷண்கஞ்ச் என்ற பகுதியைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி ஸ்வேதா குப்தா, பிடிஐ நிறுவனத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு “பலாத்காரம் செய்யப்பட்ட அந்தப் பெண்ணும் அவரது தாயாரும் என்னிடம் வந்து புகார் அளித்தனர். 7 மாதங்களுக்கு முன்பு கிராமத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 சகோதரர்களால் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் அதில் கர்ப்பம் தரித்துவிட்டதாகவும் தெரிவித்தார்” என்றார்.
பலாத்காரம் செய்த சகோதரர் களுக்கு தண்டனை வழங்கி தமக்கு நியாயம் வழங்கும்படி கேட்டு ஊர் பஞ்சாயத்தை அணுகியபோது பணத்தை எடுத்துக்கொண்டு கருச்சிதைவு செய்யும்படி உத்தரவு போட்டனர். அதை தாங்கள் ஏற்கவில்லை என அந்த இளம்பெண் தெரிவித்ததாக குப்தா மேலும் கூறினார்.
ஆறு பேர் கொண்ட குடும்பத் தைச் சேர்ந்த இவர்கள் பிழைப் புக்காக ராஜஸ்தானிலிருந்து பிஹார் வந்துள்ளனர்.
பலாத்காரத்துக்கு உள்ளான பெண்ணின் வயது 16. வயலில் கூலி வேலை செய்து அதில் கிடைக்கும் ஊதியத் தைக்கொண்டு குடும்பத்தை காப்பாற்றுகிறார் இந்த பெண்ணின் தாயார்.
பலாத்கார சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிவித்த குப்தா, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களை கைது செய்யவும் பஞ்சாயத்து செய்த கிராமத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் முயற்சி மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top