புதுடெல்லி, டிச. 5-

இந்திய ரூபாய் நோட்டுகள் மகாத்மா காந்தி படத்துடன் அச்சிட்டு வெளியிடப்படுகிறது. காந்தி படத்தைப் போன்று மற்ற தலைவர்கள் படத்துடன் நோட்டுகள் அச்சடிக்க ரிசர்வ் வங்கியிடம் திட்டம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
ரூபாய் நோட்டுகளில் காந்தி தவிர வேறு யார் படமும் கிடையாது: அருண் ஜெட்லி
மத்திய அரசின் ஆலோசனைப்படி இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 2010ம் ஆண்டு ஒரு குழுவை அமைத்தது. இந்த குழு வருங்கால இந்திய ரூபாய் நோட்டுக்கள் தயாரிப்பது குறித்து ஆலோசனை நடத்தியது.

இதுகுறித்து இன்று பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு நிதியமைச்சர் அருண் ஜெட்லி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில், ‘‘இந்த குழுவானது மகாத்மா காந்தியை போன்று இந்திய பிரதிநிதித்துவம் பெற்ற இன்னொரு தலைவர் இல்லை என்பதால், இந்திய நோட்டுகளில் காந்தி படம் மட்டும்தான் அச்சடிக்கப்படும் என்று முடிவு செய்துள்ளது.

பல்வேறு வங்கிகளின் ஏ.டி.எம். மெஷின் மூலம் எடுக்கப்பட்ட ரூபாய்களில் கள்ள நோட்டு பரவியதாக கடந்த மூன்று ஆண்டுகளில் 21 புகார்கள் ரிசர்வ் வங்கிக்கு வந்துள்ளது. சம்பந்தப்பட்ட வங்கிகளிடம் இதுதொடர்பாக அறிக்கை கேட்கப்பட்டுள்ளது.’’ என்றார்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top