பஞ்சாப் மாநிலத்தில் கண் அறுவை சிகிச்சை செய்துகொண்ட சுமார் 60 பேருக்கு முற்றிலுமாக பார்வை பறிபோன சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கோப்புப் படம்: ஜி.ராமகிருஷ்ணா.
பஞ்சாப் தலைநகர் அமிர்தசரஸில் உள்ள குருதஸ்வாரா மாவட்டத்தில் உள்ள குமான் கிராமத்தில் தனியார் மருத்துவனை மற்றும் தொண்டு நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட இலவச கண்சிகிச்சை முகாம் நடைபெற்றது. இதில் பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில் முகாம் மூலம் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களில் 16 பேருக்கு பார்வையில் கோளாறு ஏற்பட்டதாக அமிர்தசரஸில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
பாதிக்கப்பட்டவர்களை பரிசோதனை செய்ததில் அவர்கள் அனைவரும் நிரந்தரமாக பார்வையை இழந்துவிட்டதாக ஏ.என்.டி மருத்துவமனை மேற்பார்வை உதவி பேராசிரியர் கரம்ஜித் சிங் தெரிவித்தார். இதே போல குருதஸ்வாரா மாவட்டத்தில் பலருக்கும் பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்தது.
இதனைத் அடுத்து இன்று(வெள்ளிக்கிழமை) அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் பார்வை இழந்ததை அமிர்தசரஸ் துணை ஆணையர் ரவி பகவத் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும், குமான் கிராமத்தில் நடந்த கண் சிகிச்சை முகாமில் கலந்துகொண்டு சிகிச்சை பெற்ற 10 நாட்களில் சிகிச்சை பெற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் பகவத் கூறியுள்ளார்.
முதற்கட்ட விசாரணையில் சுகாதாரமற்ற முறையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டதாலேயே பார்வையிழப்பு ஏற்பட்டதாக பஞ்சாப் மாநில அரசு, தெரிவித்துள்ளது.
அமிர்தசரஸில் பாதிக்கப்பட்ட 16 பேரும் சம்பந்தபட்ட மருத்துவர்கள் மற்றும் தன்னார்வு தொண்டு நிறுவனத்தின் மீதும் புகார் அளித்துள்ளனர். மொத்தமாக குருதாஸ்பூர் மாவட்டத்தையும் சேர்த்து சுமார் 60 பேருக்கு இந்த கண் பார்வை போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சத்தீஸ்கரில் அரசு சார்பில் நடத்தப்பட்ட கருத்தடை முகாமில் பங்கேற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட 11 பெண்கள் உயிரிழந்தனர். மேலும் முறைகேடான சிகிச்சையால் 34 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் மீண்டும் அதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top