பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவை கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று தொடங்கி வைத்தார்
கர்நாடக அரசும், சலனசித்ரா அகாடமியும் இணைந்து நடத்தும் 7-வது பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா நேற்று தொடங்கி யது. பெங்களூருவில் உள்ள அம்பேத்கர் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கர்நாடக முதல்வர் சித்தராமையா குத்துவிளக்கேற்றி திரைப்பட விழாவை தொடங்கி வைத்தார்.
இந்தி பட இயக்குநர் சுபாஷ் கய், நடிகை சுஹாசினி, கர்நாடக அமைச்சர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். முதல் படமாக ஹங்கேரி நாட்டை சேர்ந்த 'தி அம்பாசிடர் டு டர்ன்' திரைப்படம் நேற்று திரையிடப்பட்டது. முன்ன தாக மறைந்த கன்னட எழுத்தாளர் யூ.ஆர்.அனந்தமூர்த்தி, இயக்குநர் பாலுமகேந்திரா ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
வரும் 11-ம் தேதி வரை நடை பெறும் இவ்விழாவில், கேன்ஸ், பெர்லின், வெனீஸ், மாஸ்கோ உள்ளிட்ட நகரங்களில் நடை பெற்ற சர்வதேச திரைப்பட விழாக்களில் வெற்றி பெற்ற சிறந்த திரைப்படங்கள் திரையிடப் படுகின்றன.
பெங்களூருவில் உள்ள 11 திரையரங்குகளில் 10 பிரிவுகளின் கீழ் மொத்தம் 44 நாடுகளைச் சேர்ந்த 170 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இதில் 3 சிறந்த திரைப்படங்களை தேர்வு செய்து வரும் 12-ம் தேதி பரிசு வழங்கப்படும். உலக திரைப் படத்தை சாதாரண மக்களும் பார்த்து ரசிக்கும் வகையில் பெங்க ளூரு சுதந்திரப் பூங்காவில் திறந்த வெளியில் சில திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.
`தி இந்து' செய்தி எதிரொலி தமிழ் படங்கள் திரையிடல்
பெங்களூரு திரைப்படவிழா வில் இந்த ஆண்டு அருண்குமார் இயக்கிய ‘பண்ணையாரும் பத்மினியும்', பிரம்மா இயக்கிய ‘குற்றம் கடிதல்' ஆகிய இரு தமிழ் திரைப்படங்கள் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளன. ‘குற்றம் கடிதல்' திரைப்படம் இன்று பெங்களூரு லிடோ திரையரங்கில் திரையிடப்படுவதால் தமிழ் ரசிகர் கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவை நடிகர் கமல்ஹாசன் தொடங்கி வைத்தார். அப்போது எந்த தமிழ் திரைப்படமும் திரையிடப்பட வில்லை.
இதனால் ‘தமிழ் திரைப் படங்களை புறக்கணித்த பெங்களூரு திரைப்பட விழாவை, கமல்ஹாசன் தொடங்கி வைக்க லாமா?' என ‘தி இந்து' நாளிதழ் செய்தி வெளியிட்டது. இதன் எதிரொலியாக இந்த ஆண்டு இரு தமிழ்த் திரைப்படங்கள் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top