மும்பை, டிச. 5-

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவிற்கு ஆட்சியமைக்கக்கூடிய பெரும்பான்மை கிடைக்கவில்லை. சிவசேனாவின் ஆதரவை கோரியது. ஆனால், நாங்கள் கேட்கும் மந்திரி சபையை தராவிட்டால் எதிர்க்கட்சி வரிசையில் அமர்வோம் என்றது. இருந்தாலும், பட்னாவிஸ் முதல் மந்திரியாக பதவி ஏற்றார்.
மராட்டிய மந்திரி சபை விஸ்தரிப்பு: சிவசேனாவைச் சேர்ந்த 5 பேர் கேபினட் மந்திரியாக பதவி ஏற்பு
இந்நிலையில், சிவசேனா ஆதரவு இல்லாமல் சட்டசபையில் பா.ஜனதா நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது. இருந்தாலும், அந்த கட்சியால் தொடர்ந்து நீடிக்க முடியாத நிலை உருவானது. இதனால் கூட்டணியில் சேர சிவசேனாவுக்கு பா.ஜனதா தொடர்ந்து வலை வீசிக்கொண்டிருந்தது. இதற்கு பயனாக 12 மந்திரிகள் தருவதற்கு ஒப்புக்கொண்டது. இதை ஏற்றுக்கொண்ட சிவசேனா பா.ஜனதாவுக்கு ஆதரவு அளித்தது.

இதையடுத்து இன்று மகராஷ்டிரா மந்திரிசபை விஸ்தரிக்கப்பட்டது. இதில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் 5 பேரும், சிவசேனாவைச் சேர்ந்த 5 பேரும் என மொத்தம் 10 பேர் கேபினட் மந்திரிகளாக பதவி ஏற்றுக்கொண்டனர். இதேபோல் இரு கட்சிகளிலும் இருந்து தலா 5 பேர் இணை மந்திரிகளாக பதவி ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இன்று மந்திரிகளாக பதவி ஏற்றுக்கொண்ட சிவசேனாவை எம்.எல்.ஏ.க்கள் விவரம்:-

கேபினட் மந்திரி: திவாகர் ராவட், சுபாஷ் தேசாய், ராம்தாஸ் காதம், ஏக்நாத் சிண்டே, தீபக் சவந்த்

இணை மந்திரி: சஞ்சய் ரத்தோட், தாதா புசே, விஜய் ஷிப்தார், தீபக் கேசர்கார், ரவீந்திர வெய்கார்.

மேலும் இரண்டு பேர் பின்னர் பதவி ஏற்பார்கள் என்று கூறப்படுகிறது.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top