கர்நாடகாவில் உள்ள ஒரு கோயிலில் பக்தர்கள் தங்க ளுடைய நோய்கள் தீரவும், பிரச்சினைகள் தீரவும் வேண்டி 10 அடி உயரத்திலிருந்து முட்புதரில் விழுந்து வினோதமாக‌ வழிபடுகின்றனர்.
கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் லேபகிரி என்ற மலை கிராம‌ம் உள்ளது. கல்வியிலும் பொருளாதாரத்திலும் மிகவும் பின் தங்கிய பகுதியாக இருக்கும் லேபகிரியில் ஆண்டுதோறும் 50-க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் பலியாவதாக அரசுசாரா நிறுனங்களின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் மத்திய அரசின் மகளிர் நல ஆணையம் இந்த கிராமத்தின் வளர்ச்சியில் அக்கறை காட்டுமாறு கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.
‘முள் திருவிழா'
இந்த கிராமத்தில் உள்ள அனுமன் கோயிலில் ஆண்டுதோறும் திருவிழா சிறப்பாக கொண்டாடப் படுகிறது. மூன்று நாட்களுக்கு நடைபெறும் இவ்விழாவில் இறுதி நாளன்று 'முள் திருவிழா' நடைபெறுகிறது.
இந்த ஆண்டிடின் 'முள் திருவிழா' நேற்று நடைபெற்றது. இதற்காக பல்வேறு இடங்களி லிருந்து முள் மரங்கள் வெட்டி கொண்டுவரப்பட்டு, கோயில் வளாகத்தில் முட்புதர் அமைக்கப் பட்டது. பின்னர் 10 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட மேடையிலிருந்து பக்தர்கள் தங்களுடைய உடை களை கழற்றி விட்டு முட்புதரில் குதித்த‌னர்.
முட்புதரைக் கண்டு பயப்பட்ட சிறுவர்களையும், பெண்களையும் கோயில் பூசாரிகள் முள்ளில் தள்ளி விட்டனர். 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த விபரீத வேண்டு தலில் பலருக்கு மண்டை உடைந்த துடன், உடல் முழுவதும் ரத்த காயங்களும் ஏற்பட்டன. பலத்த காயமடைந்த பெண் பக்தர்கள் சிலர் மயக்கமடைந்தனர்.
இதுகுறித்து பக்தர்கள் கூறும் போது, “முட்புதரில் விழுந்து ரத்தம் வடிய வேண்டினால் உடலில் உள்ள தீராத நோய்கள் விரைவில் குணமடைகின்றன. அதேபோல குடும்ப தகராறு, கடன் சிக்கல், சொத்து தகராறு உள்ளிட்ட பிரச்சினைகளும் எளிதில் தீர்ந்து விடுகின்றன.
எனவே எங்களது மூதாதையர் கள் காலத்திலிருந்து இந்த 'முள் திருவிழா'வை பய பக்தியுடன் நடத்தி வருகிறோம்” என்றனர்.
இந்த‌ வினோத வழிபாட் டுக்குத் தடை விதிக்க வேண்டும் என கொப்பலில் உள்ள சமூக ஆர்வலர்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் அளித்தனர். ஆனால் லேபகிரி மக்களின் மத நம்பிக்கையில் தலையிட முடியாது என மாவட்ட நிர்வாகம் மறுத்துவிட்டதாக தெரிகிறது.
அனுமன் கோயில் நிர்வாகி வீரேந்திர பாட்டீல் பேசும்போது, “முள் திருவிழா எங்களுடைய கலாச்சார திருவிழா. அலகு குத்துவது, தீ மிதிப்பதுபோல இதுவும் நேர்த்திக்கடன் செலுத்தும் முறைதான். சுமார் 300 ஆண்டு களாக இந்த திருவிழாவை கொண்டாடி வருகிறோம். மூட நம்பிக்கை என்ற பெயரில் இதற்கு தடை விதிப்பதை ஏற்க முடியாது” என்றார்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top