சென்னை, டிச. 6–
அம்பேத்காரின் 58–வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை துறைமுகம் அருகே உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்களும், பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்களும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.58–வது ஆண்டு நினைவு தினம்: அம்பேத்கார் சிலைக்கு கட்சி தலைவர்கள் மாலை
முன்னாள் எம்.பி. கிருஷ்ணசாமி தலைமையில் காங்கிரசார் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் யசோதா, செல்வ பெருந்தகை மற்றும் கவுன்சிலர் தமிழ்செல்வன், ஜான் சுகுமார், பிரங்கிலின் பிரகாஷ் உள்படபலர் கலந்து கொண்டனர்.
காசிமேடு சூரிய நாராயண தெருவில் டாக்டர் பாலசுந்தரம் தலைமையில் 100 மாணவர்கள் பேர் ரத்ததானம் செய்தனர்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் குமரிஅனந்தன் தலைமையில் அம்பேத்கார் படத்துக்கு மாலை அணிவித்தனர். இதில் அகில இந்திய செயலாளர்கள் திருநாவுக்கரசர், ஜெயக்குமார், முன்னாள் எம்.பி., கிருஷ்ணசாமி, யசோதா, தணிகாசலம், சிரஞ்சீவி, மாவட்ட தலைவர் ரங்கபாஷ்யம், கவுன்சிலர் தமிழ்செல்வன், இமையா கக்கன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் சேவா தளம் சார்பில் அமைப்பு செயலாளர் குமார் தலைமையில் கோயம்பேடு அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்தனர். இதில் அருள் பெத்தையா, சசிகுமார், ராஜா, ராமு, பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பெரம்பூர் ரெயில்வே எஸ்.டி.எஸ்.சி. தொழிற்சங்க வளாக அம்பேத்கார் சிலைக்கு திராவிட மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஞானசேகரன் தலைமையில் மாலை அணிவித்தனர்.
தே.மு.தி.க. சார்பில் கோயம்பேடு கட்சி அலுவலகத்தில் அம்பேத்கர் உருவப்படத்திற்கு, விஜயகாந்த் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் ப.பார்த்தசாரதி, வி.சி.சந்திரகுமார், கு.நல்ல தம்பி, நிர்வாகிகள் கிருஷ்ண மூர்த்தி, டாக்டர் முருகேஷ், பி.வேணுராம், மாவட்ட செயலாளர்கள் க.செந்தாமரை கண்ணன், வி.என். ராஜன், வி.யுவராஜ், ஏ.எம்.காமராஜ் கலந்து கொண்டனர்.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் அந்த கட்சினர் மாலை அணிவித்தனர். முன்னதாக கடற்கரை ரெயில் நிலையம் அருகில் இருந்து த.மா.கா., எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் தாஸ்பாண்டியன் தலைமையில் ஜி.கே.வாசனை வரவேற்று அழைத்து வந்தனர்.
மாலை அணிவிப்பு நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி.க்கள் விசுவநாதன், கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கோவை தங்கம் ஞானசேகரன், விடியல் சேகர், வேணுகோபால் மற்றும் நிர்வாகிகள் சக்தி வடிவேல், வில்லிவாக்கம் சுரேஷ், திருவேங்கடம், ஜவகர்பாபு, ஜி.ஆர்.வெங்கடேஷ், ராஜ்குமார், சைதை ரவி, முனைவர் பாட்சா, பிஜூ ஜாக்கோ, சைதை நாகராஜன், கல்யாணி, அண்ணை ஜெகன், கத்திபாரா ஜனார்த்தன், முகமது பயாஸ், பதம்சந்த், சிவசுப்பிரமணியம்,. டி.என்.அசோகன், தாம்பரம் நாராயணன், தமிழக தலித் கட்சி தலைவர் தலித்குடிமகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பா.ம.க. சார்பில் முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி தலைமையில் துறைமுகத்தில் உள்ள அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்தனர். மாவட்ட அமைப்பாளர் ஜெயராமன், மாவட்ட தலைவர்கள் சுரேஷ், ஏழுமலை, மற்றும் முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் அதன் துணை பொது செயலாளர் சத்திரியன் வேணுகோபால், வீரராகவன், முத்துராஜ், வெள்ளையம்மா உள்பட பலர் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்திய குடியரசு கட்சி (அத்வால்யா) சார்பில் ஜாதி, மதம் ஒழிய வலியுறுத்தி அதன் பொது செயலாளர் வக்கீல் லிங்கேசன் தலைமையில் சைக்கிள் பேரணி நடந்தது. புளியந்தோப்பில் தொடங்கிய இந்த பேரணி ஐகோர்ட்டில் முடிவடைந்தது.
கோயம்பேடு அம்பேத்கார் சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பாவரசு, பாலசிங்கம், உஞ்சைஅரசன், சேகுவாரே, எஸ்.எஸ்.பாலாஜி, செல்வராஜ், கபிலன், வீரமுத்து, இளஞ்செழியன், கடம்பன் செல்லத்துரை, மணி, க.முத்துமுகமது, கதிர் ராவணன் கலந்து கொண்டனர்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் அம்பேத்காரின் நினைவு நாளையொட்டி கட்சியின் நிறுவனர் – தலைவர் சரத்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் அவைத் தலைவர் செல்வராஜ், துணைத் தலைவர் ஏ.நாராயணன் எம்.எல்.ஏ., இளைஞரணி துணை செயலாளர் மகாலிங்கம், சென்னை மண்டல செயலாளர் எம்.ஏ.சேவியர், மாவட்ட செயலாளர்கள் நாதன், பிரசாத், பொன்னரசன், சந்திரபோஸ், தொகுதி செயலாளர்கள் ஐவென்ஸ், வினாயகமூர்த்தி, ரஞ்சன், சரவணன், என்.ஆர்.பி.ஆதித்தன் மற்றும் நிர்வாகிகள் பாரதி, சுந்தர், விஜயகுமார், உதயகுமார், குமார், எட்ராஜ், முருகேசபாண்டியன், சேக் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பெரியமேட்டில் உள்ள அம்பேத்கார் சிலைக்கு நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிர்வாகிகள் அமுதா நம்பி, கவிராஜேந்திரன், மாவட்ட செயலாளர்கள் புகழேந்தி அய்யனார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கார் சிலைக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் சார்பில் என்.ஆர்.டி. பிரேம்குமார், பொருளாளர் புழல் தர்மராஜ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
வடசென்னை மாவட்டத் தலைவர் மணலி குமார், துணைத் தலைவர் பாபாஜி, மத்திய சென்னை மாவட்ட அமைப்பாளர் ஐயர், மத்திய சென்னை மேற்கு மாவட்டத் தலைவர் விக்டர், பொருளாளர் தேவராஜ், கிழக்கு மாவட்ட செயலாளர் புரசை நாகராஜ், தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் பாண்டியன், சென்னை மேற்கு மாவட்டத் தலைவர் வைகுண்டராஜ், செயலாளர் முத்து, பொருளாளர் தங்கம் ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அகில இந்திய டாக்டர் அம்பேத்கார் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்தார்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top