புது டெல்லி, டிச.6-

சந்தைப்படுத்துவதில் வல்லவரான பிரதமர் நரேந்திர மோடி அதிகாரங்கள் அனைத்தையும் தன்னிடமே வைத்துக்கொண்டு இந்த நாட்டை ஒற்றை மனிதராக ஆட்சி செய்து விடலாம் என்று நம்புகிறார் என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
அதிகாரங்கள் அனைத்தையும் தன்னிடமே வைத்துக் கொள்ள மோடி நினைக்கிறார்: ராகுல் குற்றச்சாட்டு
தலைநகர் டெல்லியில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணியினருடனான கலந்தாய்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற ராகுல் காந்தி, ‘ஜனநாயக நடைமுறை வேலைக்கு ஆகாது என்பதுபோல் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நடந்து கொள்கிறது’ என்னும் பொருள்பட பேசியதாவது:-

ஜனநாயக மரபு என்பது தேவையற்றது, பலனில்லாதது என அவர்கள் நினைக்கிறார்கள். இதை வெளிப்படையாக கூற முடியாவிட்டாலும் அவர்களின் எண்ணம் இதுவாகவே உள்ளது. பாராளுமன்றத்தின் காங்கிரஸ் கட்சி தலைவரான மல்லிகார்ஜுனா கார்கே பேசிக்கொண்டிருக்கும்போது அவரது மைக்கை அணைத்து விடுகின்றனர். நாங்கள் இதைப்போன்ற காரியங்களை செய்ததே இல்லை. 

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைமையிலான எங்களது அரசின் திட்டங்கள் அதிகாரங்கள் அனைத்தும் பெரும்பான்மையான மக்களை சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டன. ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் ஆட்சியோ.., மக்களிடம் இருந்து அதிகாரங்களை பறிப்பதில் அக்கறை காட்டுகிறது. இதுதான் எங்கள் அரசுக்கும், அவர்கள் அரசுக்கும் இடையில் உள்ள வித்தியாசமாகும்.

எதையாவது சொல்லி, எதையாவது சந்தைப்படுத்திவிட்டு பின்னர் வேறு எதையாவது சொல்ல ஆரம்பிக்கலாம் என்றும், நான் மட்டுமே இந்த நாட்டை வழிநடத்த முடியும் எனவும் பிரதமர் மோடி நினைக்கிறார்-ஆழமாக நம்புகிறார். நாட்டின் ஒரே அடையாளமாக நான் மட்டுமே இருக்க வேண்டும் என்றும் கருதுகிறார். 

ஆனால், இது நடைமுறைக்கு சாத்தியப்படப்போவதில்லை. மக்களால் மட்டுமே இந்த நாட்டை வழிநடத்த முடியும். 

இவ்வாறு அவர் பேசினார்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top